பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 வேலைவாய்ப்புகளை எவ்வெவ்வாறெல்லாம் ஏற்படுத்த லாம் என்பது பற்றிச் செயல்படுத்தத்தக்க கற்பனை அறிவோடு திட்டங்களைத் தீட்டலாம். இவ்வகையில் சமுதாயத்தில் எந்த எந்தப் பிரிவினருக்கு எந்தெந்தத் தேவைகள் இருக்கின்றன என்பது முதலில் விரிவாக ஆராயப்பட்டு (Survey) விவரங்கள் தொகுக்கப் படவேண்டும். அதற்கு ஏற்ப வேலைவாய்ப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். இச்சிறு கட்டுரையில் மறவாமல் குறிப்பிடத்தக்க இரு சிக்கல்கள் உண்டு. ஒன்று விலைவாசி ஏற்றம், மற்றொன்று எல்லாவற்றிலும் பெரியது, இளைஞர்கள் உடல்உழைப்புப் பணிகளை பெரிதும் மதிக்காமலும் விரும்பாமலும் நகத்தில் அழுக்குப்படாத நாகரீகப் பணிகளையே (White collerad jobs) விரும்புதல். விலைவாசிகள்-அதுவும் அடிப்படை நுகர்பொருள்களில் (Consumer goods) விலைவாசிகள் விடம்போல் ஏறிகொண்டு போவதும், முதலாளித்துவ அமைப்பில் முக்கிய தீமையாகும். இந்த உண்மையையும் அண்மையில் என் உலகப் பயணத்தில் சீனாவையும் பிற நாடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இந்த முதலாளித்துவ கொடுமை நீங்கத்தான் காந்தியடிகள் கிராமத் தன்னிறைவு கைத்தொழில் திட்டத்தைப் பெரிதும் வற்புறுத்தினார். இதன் வாயிலாக இங்கு குறிப்பிட்ட இரு சிக்கல்களும்விலைவாசி ஏற்றம், உடலுழைப்பை வெறுத்தல் ஆகிய இரு சிக்கல்களும் - தீரும். ஆனால் உலகப் போக்கைப் பார்க்கும்போது தன் முயற்சியிலும் தடி முயற்சிக்கே வெற்றி கிடைக்கும் என்று தோன்றுகிறது. காரணம் மனிதரிடம் இன்னும் மாறாது இருக்கும் விலங்கு இயல்பு -அறிவுக்கு அஞ்சுவதிலும் அடிக்கு அஞ்சுவதாகவே இருக்கிறது. அதனால்தான் காந்தீயம் தோற்றுக் கம்யூனிசம் வெல்கிறது.