பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 வரட்டுமா?’ என்று கேட்டேன். ரொம்ப நன்றி" என்றார்கள். நானும் வழித்துணையாகப் போனேன்; அவர்களும் வாழ்க்கைத் துணையாகவே அமைந்தார்கள். யான் உலகப்பயணம் புறப்பட்ட ஜூன் 14 ஆம் நாள் எவ்வளவு அழுத்தமாக என் நினைவில் இருந்தது-இருக்கக் கூடியது-இருக்க வேண்டியது என்பதை மற்றவர்கள் ஆ. நினைவு கூறவே இக்குறிப்பு. ஆனால் 1982 ஜூன் 14ஆம் நாள் சில காரணங்களால் எனக்கு மன நினைவு நாளாக அமையவில்லை; பிண நினைவு நாளாக அமைந்து விட்டது; வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் அளவுக்கு அன்று சில நிகழ்ச்சிகள் நடந்துவிட்டன. அந்த நாளுக்குச் சற்றொப்ப ஏழு மாதங்கட்கு முன் என் மனைவி இறந்த "இழிவு காரணமாக நான் அடையாத துயரம் கூட அன்றைக்கு ஏற்பட்டது. அப்படியும் உயிரை இறுகப் பிடித்துக் கொண்டு உயிரை விட்டாலும் வானத்திலோவேறு எங்கோ விடுவதே மேல் என்ற எண்ணத்தில் விசாக்களை-போக முடியாத நாடுகட்கும் போவதற்கு விசாக்களை வாங்கிக் கொண்டு சூன் 14ஆம் நாள் இரவு மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு விரைந்தேன். மேற்கண்ட சிறு முன்னுரை ஏன் என்ற வினா மற்றவர் கட்கு எழக்கூடும் ; 55-வது வயது - 5 நாடுகள் - 55 நாள்கள் என் உலகப் பயணம் உருவாகிய சூழலையும் மற்றவர்கள் தெரிந்து கொள்வது பல்லாற்றானும் பயன் தரும் என்பதே என் பணிவார்ந்த விடை. முன்னுரையாக மற்றொன்றையும் நன்றி மறவாமல் இங்கே குறிப்பிட வேண்டும். சீனப் பயணம் பற்றிய எண்ணத்தை எனக்கு முதல் முதல் ஊட்டியவர் சென்ன்ைப் பல்கலைக் கழகப் பொருளியல் துறை விரிவுரையாளர்-புகழ் பெற்ற எழுத்தாளர்-நூலாசிரியர்-கவிஞர்.மொழிபெயர்ப் பாளர்-நாட்டுப் பற்றாளர் - சிறைசென்ற செம்மல்