பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iuuistorio 15ண்பர்களே நான் 14-6.82ல் புறப்பட்டு 35நாட்கள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் போனேன். பயணம்' என்ற சொல்லை நினைக்கும் போது அதற்குத் தொடர் பான வேறு மூன்று சொற்களும் எனது நினைவிற்கு வந்தன. அவை பணம்’, பயம்" என்ற சொற்கள். வெளி நாட்டிற்குப் பயணம் போகும்போது, பயணம் எவ்வாறெல்லாம் அமையுமோ என்ற பயம்"; அதற்கு அடிப்படையாக அமைவது பணம்’, பயணத்தில் சென்று. தாயகம் திரும்புவதற்குள் நாம் உயிருடன் வருவோமோ என்ற எண்ணத்தில் தன்னையே பணயமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைமை. நான் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, சீனம் ஆகிய நாடுகளுக்குப் போய் வந்தேன். சீனாவிற்குப் போக எனக்குப் பெரிதும் உதவியவர், என் அருமை நண்பரும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றுபவரும், முழுமையான நாத்திகருமான டாக்டர் மு. நாகநாதன் அவர்கள்தான். எங்களோடு தமிழ் நாடு கல்வி அமைச்சர் திரு. அரங்க நாயகமும் சீனாவிற்கு வந்திருந்தார். நாங்கள் அங்கு கண்ட காட்சிகள் என்றும் எங்களது நினைவில் பசுமையாக இருக்கும். இந்து மதத்திலிருந்து ஒரு சீர்திருத்த மதமாக தோன்றிய புத்தமதம், சீனாவில் சீனர்களிடையே மூஉ நம்பிக்கைகளைப் பெரிய அளவில் பரப்பியிருந்தது. சீனா