பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 'செஞ்சீனாவாக மாறியபின் அந்த மூட நம்பிக்கைகள் பெரிதும் மறைந்தன. அறிவொளியுடன் அம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர். முடிவெட்டவும் சீன மக்களிடையே, ஒரே குழந்தை போதும் என்ற எண்ணம் மேலாங்கியிருக்கிறது. குழந்தைகள் சமூகப் பார்வையுடன் வளர்க்கப்படு கிறார்கள். குழந்தைகள் படிக்கும் கிண்டர் கார்ட்டன்’ பள்ளிகளில் வேயது குழந்தைகளுக்குத் தலைமுடிவெட்டும் பணியைக்கூட கற்றுக் கொடுக்கிறார்கள். இது கேவலமான பணி என்று அவர்கள் கருதுவதில்லை. தன்னம்பிக்கையை ஊட்டும் அளவில் பாடதிட்டங்கள் அமைகின்றன. கிண்டர் கார்ட்டன்’ வகுப்பு முதல் உயர்கல்வி படிக்கும் வகுப்புவரை தங்கள் தாய் மொழியையே பயிற்சி மொழியாக வைத்துள்ளனர். பெண்கள் நல்ல முறையில் முன்னேறியுள்ளனர். கேன்டன்' என்ற புகைவண்டி நிலையத்தில் நாங்கள் இறங்கியபோது, வாடகைக்கார் ஒட்டுபவர் அனைவரும் பெண்களாகவே இருந்தது கண்டு நாங்கள் வியப்புற்றோம். அவர்கள் நல்ல உழைப்பாளிகளாய் உள்ளனர். அங்கு தோழர் மாசேதுங் அவர்கள் உடலை அப்படியே வைத்துள்ளனர். அந்த நினைவாலயத்திற்குச் சென்றோம். அந்த நினைவாலயத்திலும் அதன் சுற்றுமுள்ள வட்டாரத்திலும் முழு அமைதியான சூழ்நிலையிருக்கிறது. சிறு சந்தடிக்குக்கூட, சிறு ஒலி எழுப்புவதற்குக்கூட வாய்ப்பில்லாமல் ஒரே அமைதியாக இருக்கிறது. அங்கே போகும்போது நம்மையே மறந்து விடுகிற சூழ்நிலை இருக்கிறது. -