பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 கூச்சல் மயம் ஆனால் அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் அவர்களின் நினைவாலயம் சென்ற போது அதற்கு நேர்மாறான சூழலைத்தான் கண்டோம்; உள்ளேயும் இரைச்சல் வெளி யேயும் ஒரே சத்தம். அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகை களிலும் நடைமுறையிலும் காதலர்கள் அரைநிர்வாணக் கோலத்தில் இருப்பதைக் கண்டோம். ஆனால் இத்தகைய நிலை சீனாவில் இல்லை. . ஜப்பான் மக்கள் குட்டையர்கள் என்ற நிலையை அங்கு தற்போது மாற்றிக் கொண்டு வருகின்றனர். ஜப்பான் நாட்டில் ஜப்பானியர்கள் மிகவும் உயரமான மனிதர்களாக வளர்ந்து வருகின்றனர். ஆங்காங், பேங்காக் போன்ற நாடுகளில் விபச்சாரம் தான் பெரிய தொழிலாக இருக்கிறது. முதலாளித்துவ நாடுகளை விட, பொதுவுடைமை நாடு களில் நிலைமை நன்றாக உள்ளது. . . . . நாம் விடுதலை பெற்றது 1947ல். சீனா, பொது வுடைமைப் பூங்காவாக மாறியது 1-10-1949ல். 1949ல் விலைவாசிகள் எந்த நிலையில் இருந்தனவோ அதே நிலை. யில்தான் இன்றும் இருக்கின்றன. சீனாவில் காரல் மார்க்ஸ், லெனின், மாசேதுங். படங்கள் பல இடங்களில் இருப்பதைக் காணலாம். அங்கு. ஏற்பட்ட கலாச்சாரப் புரட்சி நடவடிக்கைகளில் மக்களுக்கு மகிழ்ச்சி இல்லை. அங்கு பொது சுகாதாரம் நல்ல முறையில் உள்ளது. னோவில் கல்வி நிலையங்களில் கடவுளைப் பற்றியோ சமயங்களைப் ப ற் றி .ே யா சொல்லப்படுவதில்லை. மக்களுக்குத் தன்னம்பிக்கை வருவதற்காகக் கல்வி நிலை யங்கள் உதவுகின்றன.