பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமெரிக்காவில் அண்ணா நினைவு அமெரிக்காவிற்குப் போய் பல இடங்களையும் பார்த்தேன். அமெரிக்காவிற்குப் போகும்போது, பழம் பெரும் அமெரிக்கப் பல்கலைக் கழகமான ஏல் பல்கலைக் கழகத்தின் சப்ஃபெல்லோஷி என்ற பெரும் சிறப்பைப் பெற்ற முதல் இந்தியரான பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு அந்தப் பெருமையை அளித்ததைக் கண்டு பொறாமையடைந்த நம் நாட்டில் இருந்த சில சிறுமதியாளர் கள் அண்ணாதுரைக்குக் கிடைத்தது, முழு ஃபெலோஷிப் கூட இல்லை. சின்ன-அதாவது 'சப் ஃபெலோஷிப்தான்” என்று எண்ணி நகையாடியதும் எனது நினைவிற்கு வந்தது. பாவம், அந்தப்பித்தர்கள், கெடுமதியாளர்கள், *சப் என்பது ஒருவர் பெயரின் சுருக்கம் என்பதை அறியாதவர்கள். அந்த ஏல் பல்கலைக் கழகத்தைப் பற்றி நாம் தெரிந்து கொள்வது நல்லது. சஏல் பல்கலைக் கழகத்திற்கும் சென்னைக்கும் தொடர்பு உண்டு. சென்னையில்சம்பாதித்த பணம் இறுதி யில் ஏல் பல்கலைக்கழகத்திற்குச் சென்றுள்ளது. ஏல் என்பவன் ஒரு வெள்ளையன். 1649 முதல் 1721 வரை வாழ்ந்தான். பாஸ்டனில் பிறந்தான். லண்டனில் தொடக்கக் கல்வி பெற்றான். 1671ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் எழுத்தாளராக (கிளார்க்) நியமிக்கப் பட்டான். சென்னைக்கு 1672ம் ஆம் ஆண்டு ஜூன் 23-ம் நாள் வந்தான். -