பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 35 சத்திரங்களில் சென்னை மக்களின் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் குட்டி நீதிபதி ஆனான். சென்னையில் அப்போது கைம்பெண்ணாகி ஆறு மாதமே ஆகியிருந்த காத்தரீன்" என்னும் ஒரு வெள்ளைச் செல்வச் சீமாட்டியை 1686 நவம்பர் 4ம் நாள் மணத்தான். படிப்படியாகப் பதவி உயர்வுகள் பெற்று 1687 ஜூலை 25ம் நாள் செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் கவர்னராக ஆனான். கிழக்கிந்தியக் கம்பெனியின் கழுகுக் கண்களினால் அவன் வெள்ளை ஆதிக்கத்தை வேர்பிடிக்கச் செய்வதில் வல்லாளனாக்கப்பட்டான். 7 ஆண்டு இங்கே 1687 ல் இறந்துபோன தன் தமையன் டேவிட் என்பவ னின் நினைவாகக் கடலூரில் கோட்டை ஒன்றை எழுப்பினான். பிறகு அவனது செல்வாக்கு கிழக்கித்தியக் கம்பெனி அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்ட இன்னல் களால் இறங்குமுகம் ஆகியது. அதன் விளைவாக ஏல் இங்கிலாந்து திரும்பினான். ஏல்மேல் ஏற்றபட்ட புகார்கள் விசாரிக்கப்பட்டன. தன் தமையன் பேராலும் தன் செல்வாக்காலும் அவன் அடித்த பெரும் கொள்ளைகள் அவனாலேயே ஒப்புக் கொள்ளப்பட்டன. ஏழாண்டுக் காலம் கொள்ளையடித்த குற்றத்திற்காக அவன் இங்கிலாந்துக்குப் பயணமாக முடியாதபடி சென்னையிலேயே தடுத்து வைக்கப் பட்டான். 1704லிலிருந்து அவனுக்கு இங்கிலாந்தில் மறுவாழ்வு கிடைத்தது. வைர வியாபாரியும் ஆனான். தன் மூன்று மகள்களும் செல்வக் குடும்பத்தில் மண உறவு கொள்வது கண்டு மகிழ்ந்தான். மறுவாழ்வு கண்ட ஏல் கொள்ளை வாழ்வுக்கு மாறாகக் 'கொடுக்கும் வாழ்வைத் தொடங்கினான். ஏலின்