பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கொடை உள்ளம் அறிந்த அமெரிக்க அன்பர்கள் 1788ல் அவனுக்குப் பொருள் உதவி வேண்டி விண்ணப்பன் செய் தனர். எகிப்திய பிரமிடுகளைக்காட்டிலும் அவன் பெரும் புகழ்நிலை உயர, தங்கள் பல்கலைக் கழகத்திற்கு அவனது பெயரைச் சூட்டுவதாக அறிவித்தார்கள்; ஏல் பெருந் தொகையை அளித்தான். இதில் சென்னைக்குள்ள சிறப்பு, தன் செல்வத்தைக் கொள்ளையடித்தவனும் கொடையாளியாய் ஆனபோது அவனின் அழகிய வண்ணப்படத்தைப் பாதுகாத்து, விடுதலை பெற்ற இந்தியாவிற்கு அமெரிக்கக் குடியரசுத் தலைவர் அய்சனோவர் வந்தபோது அவரிடம் அப்படம் ஏல் பல்கலைக் கழகத்தை அணி செய்யும் வகையில் அன்பளிப்பாக வழங்கியமையே, ஒரு நூற்றாண்டுக் காலக்கூறில் ஏல் பல்கலைக் கழகம் மிக அதிகமான நன்கொடையை-பொருள்களாக-புத்தகங் களாக-பணமாகப் பெற்றது. அதனால் அந்த முதல் பெருங்கொடையாளியின் பெயர் இன்றும் அப்பல்கலைக் கழகத்தை அணி செய்கிறது. இன்று ஏல் பல்கலைக் கழகம் பெற்றுள்ள-செல்வம் செல்வாக்கை நோக்கும்போது ஏல் கொடுத்த கொடை அதிகமில்லையென்றாலும், காலத் தினாற் செய்த உதவியை அமெரிக்க மக்கள் போற்றும் பண்பு போற்றத் தக்கது. தனி வானொலி இந்தியப் பல்கலைக் கழகங்களில் முதல் மூன்று. பல்கலைக் கழகங்களான சென்னை, பம்பாய், கல்கத்தா பல்கலைக் கழகங்கள் தோன்றுவதற்கு ஒன்றரை நூற்றாண்டுகட்கு முன்பே அதாவது 1701டிலேயே ஏற். பட்டதுதான், ஏல் பல்கலைக் கழகம். அமெரிக்காவில் தோன்றிய மூத்த மூன்று பல்கலைக் கழகங்களுள் மூன்றாவதுதான் இந்த ஏல் பல்கலைக்கழகம்