பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#37 இதற்கு என்று தனி செய்தி நிலையம்,வானொலி நில்ைகம், மாபெரும் கலையரங்கம் உண்டு. இன்னும் கூட நமது நாட்டில் எந்தப் பல்கலைக் கழகத்திலும் இந்த நிலை இல்லை. 165 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்தப் பல்கலைக் கழகத்தின் நூலகத்தில் மட்டும் 74, 01, 953 (எழுபத்து நாலு லட்சத்து ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பத்து மூன்று) நூல்கள் உள்ளன. இவற்றுள் 12,95,555 (பன்னிரண்டு லட்சத்து தொண்ணுற்று ஐம்பத்தாறு: துண்பட ஒளி ஒலிச்சுருள்கள் Aduio Visual ஆகி உள்ளன. 57, 891 (ஐய்ம்பத்து ஏழாயிரத்து எண்ணுரற்று தொண்ணுாற்று ஒன்று) இதழ்கள் சந்தா செலுத்தி வர வழைக்கப்படுகின்றன. இப்பல்கலைக் கழகத்தில் கிடைத் தற்கரிய நூல்கள்-சுவடிகள் தொகுப்பு உள்ளன. உலகத் திலேயே மிக அதிகமான நூல் தொகுப்புகள் உடைய பல் கலைக்கழகம் இதுவெனக் கருதப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்தை அடுத்து ஒன்றரை மைல் தொலைவில் 320 ஏக்கர் நிலம் விளையாட்டுப் போட்டிகட்கும் பயிற்சி கட்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பல்கலைக் கழகங்களின் வரலாற்றில் பல முதன்மை இடங்கள் பெற்ற பெருமை ஏல் பல்கலைக் கழகத்திற்கு உண்டு. இந்த விவரங்களை நான் சொல்வதற்குக் காரணம் அறிஞர் அண்ணா அவர்களை அழைத்துப் பெருமைப் படுத்திய ஏல் பல்கலைக்கழகம் ஏதோ ஒரு சாதாரண பல் கலைக்கழகம் அல்ல, அது ஒரு ஒப்பற்ற பல்கலைக்கழகம் என்று மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத் தான. இத்தகைய சிறப்பு வாய்ந்த பல்கலைக் கழகத்தின் முன் னாள் மாணவர் ஹெண்டன் சப்" எனும் பெயருடை யவர் 1938ல் ஏற்படுத்திய ஃபெல்லோ-ஷிப்பின் நோக்கம் 320.8–9