பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 திரு. கே.ஆர். ஜமதக்கினியின் மருமகர்-என்னினும் சிறந்த படிப்பும் பண்பும் படைத்தவர்-டாக்டர் மு. நாகநாதன். அவர்களே. 1953-இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் யான் ஆய்வு மாணவனாக இருந்தபோது சீனா செல்லும் வாய்ப்பு ஒன்று வந்தது. அது இந்தியப் பல்கலைக் கழகங் கள் சார்பில் ஆசிரியர்களும் மாணவர்களும் கொண்ட ஒரு குழு சச்சி, பி. இராமசாமி ஐயர் அவர்கள் தலைமையில் உருவாக்கிய ஏற்பாடே ஆகும். அக்குழுவிற்குச் செல்ல் விண்ணப்பங்கள் வேண்டப்பட்டன. என்னைப் போலவே, அப்போது என்னோடு தத்துவத் துறையில் ஆய்வாளராக இருந்து, இப் போ து அத்துறையில் பேராசிரியராக இருக்கும் டாக் டர் பி. கே. சுத் தர ம் அவர்களும் விண்ணப்பம் செய்திருந்தார்கள், யானும் விண்ணப்பம் செய்திருந்தேன் ? அப்போது துணைவேந்தராக இருந்த டாக்டர் சர் ஏ. எல். முதலியார் என்னைத் தேர்ந் தெடுக்கவில்லை. பிறவிப் பண்பாகவே எதையும் பார்க்க வேண்டும்; தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பம் படைத்தவன் யான். எனவே என்னைப் பல்லாற்றானும் அறிந்து அருள் பாலித்து வந்த சர். ஏ. எல். முதலியார் என்னைத் தேர்ந்தெடுக்காதது வருத்தமே. அவர் தேர்ந் தெடுத்த அவர் என்னைப் போலவே பல்கலைக் கழகத்தில் ஆய்வு மாணவராக இருந்தவர்; இப்போது எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை அவர் சீனா போய்வந்தபின் என்ன செய்திகளை எவருக்குச் சொன்னார் என்பதும் தெரிய வில்லை : சர் சி. பி., சீனப் பயணம் பற்றிக் கொடுத்த அறிக்கை யையும் தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் சொல்வேன் : இந்த முதல் வாய்ப்பை இழந்த எனக்கு இருபது ஆண்டு கட்குப் பின்பு டாக்டர் மு. நாகநாதன் வாருங்கள், சீனாவுக்குப் போய் வரலாம் என்று சொன்னபோது