பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் ஏர்வாடி பேராசிரியர் டாக்டர் சஞ்சீவி அவர்களே ! நான் கிரீஸ், இத்தாலி, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய நாடு களைத்தான் பார்த்தேன். தாங்கள் ஜெர்மனி, ஆலந்து ஆகிய நாடுகளையும் பார்த்துள்ளீர்கள். தங்கட்கு ஏற்பட் டிருக்கும் ஐரோப்பா பற்றிய பொதுக் கருத்துகள் எவை? பேராசிரியர் சஞ்சீவி 1. ஐரோப்பாவில் பல நாடுகள் . பலமொழிகள். சில நாடுகள் தமிழகத்தின் சில மாவட்டங்கள் அளவே இருக்கும். அப்படியிருந்தும் ஒவ்வொரு நாடும் தன் தின் மொழியை மருத்துவ, பொறியியல் உயர்கல்விக்கும் உரிய தாய்க் கடந்த சில நூற்றாண்டுகளாகவே - குறிப்பாக அறிவியல், தொழிலியல் புரட்சி தோன்றிய காலத்தி லிருந்தே - வளர்த்து வந்துள்ளன. அதனால் இந்திய நாட்டில் இருப்பது போல ஆங்கிலத்தின் ஆக்கிரமிப்பு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் சமுதாயத்தின் மிக மேல் பட்ட நிலையிலும் இல்லை (அண்மையில் ஜெனிவாவில் நடந்த இரு வல்லரசுகளின் உச்ச மாநாட்டிலுங்கூட இரு நாடுகளின் தலைவர்களும் மொழிபெயர்ப்பாளர்களின் துணைகொண்டே பேச்சு நடத்தியது நினைக்கத்தக்கது.) 2. இந்தியாவைப் போலல்லாமல் மொழி இன வேறு பாடுகள் இருப்பினும் உணவு, உடை, உறையுள் பெரிதும் ஒரே மாதிரியாக உள்ளன.