பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 3. ஐரோப்பாவில் (கிரீசு முதல் இங்கிலாந்து வரை) பழங்கால வீடுகள் . ஒடு போட்ட வீடுகள் (சைனாவிலும் இப்படியே) இருப்பதைப் பார்க்கும்போது ஐரோப்பிய - ஆசிய ஒருமைப்பாட்டு உணர்வே தோன்றுகிறது. 4. ஆசிய ஐரோப்பிய நாகரிக ஒருமைப்பாட்டை இந்தோ ஐரோப்பிய மொழிகள் வலியுறுத்தும். சமஸ்கிருதமும் ஐரோப்பிய மொழிகளும் ஒரு குடும்பத் தொடர்புடையவை. அண்மைக்கால மொழியியல் ஆய்வு கள் சமஸ்கிருதத்திலும் பழமையானவை கிரேக்கமும் லத்தீனும் என்று நிறுவியுள்ளன. 6. பழைய ஐரோப்பாவிலிருந்தே சாதி முறை இந்தியாவிற்குள் நுழைந்திருக்க வேண்டும் என்பது அண்மைக்கால இந்தோ ஐரோப்பிய மொழிகளின் ஒப்பாய் வால் விளங்குகிறது. 7. இன்றைய ஐரோப்பாவின் . சிறப்பாகப் பழைய ஐரோப்பாவின் இரு கண்களாகிய கிரீசிலும் ரோமிலும் பழமை இடிபாடுகளாய் உள்ளது. வடக்கே போகப்போக இடைக்காலப் பழமை நன்று பாதுகாக்கப்படுகின்றது. இன்னொன்று : இன்றைய ஐரோப்பாவில் ஏதென்சிலிருந்து லண்டன் வரை பொருளாதார நெருக்கடிகளால் வறுமை மிஞ்சி வேலையில்லாத் திண்டாட்டம் பெருகிப் பரவலாகக் சமதர்ம அலை திரும்பியுள்ளது. மதப்பற்றும் ஒழுக்கமும் குன்றி வருகின்றன. குடும்பம் பிணைப்புகள் நாளும் சிதைந்து வருகின்றன. ஐம்புல இன்பங்களிலேயே மக்களுக்கு, அதிக நாட்டம் உள்ளது. - 8. ஆங்கிலமும் இந்தி போலவே ஆரிய மொழியே. ஆயினும் வரலாற்றுக் காரணங்களால் - சிறப்பாக அமெரிக் காவின் ஆட்சி|கல்வி மொழியும் ஆங்கிலமாக இருப்பதால் அம்மொழி முதிர்ச்சி பெற்றுள்ளது. மேலும், உலக மக்கள்