பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 தொகையில் பாதிப் பேர் ஆங்கிலம் அறிந்தவர். எனவே எல்லா நாடுகளும் ஆங்கிலம் கற்கின்றன. இந்தியாவிலும் இந்தியோடு ஆங்கிலமும் தமிழ் நாட்டிலும் தமிழோடு ஆங்கிலமும் கற்பிக்கப்படுவது சரியே. ஆனால் தமிழ் மக்களின் தாய்மொழியாகிய தமிழே நூற்றுக்குத் தொன்னுாரு விழுக்காடேனும் ஆட்சியிலும் பல்கலைக் கழகத்திலும் இடம்பெற வேண்டும். 9. இறுதியாக-உறுதியாக ஐரோப்பிய மொழிகள்ஏன்? உலக மொழிகள் அனைத்திலும் திருக்குறள் மொழி பெயர்ப்புகளைத் தமிழ்ப் பல்கலைக் கழகம்|யுனஸ்கோ வாயிலாகச் செய்து ஒல்லும் வகையால் எல்லாம் தமிழக அரசு பரப்ப வேண்டும். 10. தமிழக அரசு இந்திய அரசின் நிதி உதவியோடு அயல் நாடுகள் அனைத்திலும் தமிழறிவும் (பயிற்சி வந்து) பிற மொழியறிவும் உடையவர்களைக் கொண்டு பி.பி.சி. தமிழ்ப் பிரிவுப் போல குறைந்த அளவிலான அமைப்பு நிலையிலேனும் (Skeleton office) அனைத்துலகத் £51&prlias colourtāsār (international Tamil Studies) ஏற்படுத்தி ஆங்காங்குள்ள அருங் காட்சியகங்களிலும் நூலகங்களிலும் அனைத்து நிலையிலும் வகையிலும் உள்ள குறிப்புகளைத் தொகுத்துக் கால முறைப்படி தொகுதி தொகுதிகளாகப் படங்களுடனும் ஆவனங்களுட னும் வெளியிட வேண்டும். 11. மேற்படி அனைத்துலகத் தமிழாய்வு மையங்கள் வாயிலாகவே ஐரோப்பிய இலக்கியங்களில் சிறந்தன் வற்றைத் தமிழாக்கம் செய்து வெளியிட வேண்டும். அவ்வாறே தமிழிலக்கியங்களில் தல்ைசிறந்தனவற்றை ஐரோப்பிய மொழிகள் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.