பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#44 12. ஐரோப்பாவில் பலர் செய்திருக்கும் வீர முயற்சி களை (Adventures) நினைக்கும்போது நம் நாட்டில்-சிறப் பாகத் தமிழ் நாட்டில் அத்தகைய முயற்சிகள் வரலாற்றை பும் வரலாற்றுச் சின்னங்களையும் பாதுகாக்கும் முயற்சிகள் எவ்வளவு குறைவாக உள்ளன என்று எண்ணி நாணவும் வருந்தவும் வேண்டியுள்ளது. கவிஞர் ஏர்வாடி ஐரோப்பியப் பயணத்தில் உங்கள் நெஞ்சைத் தொட்ட சில நிகழ்ச்சிகளைச் சொல்லலாமே ! பேராசிரியர் சஞ்சீவி என்னுடைய ஐந்து வார ஐரோப்பிய பயணத்தில் என்னைப் பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சிகள் சில : 1. குழந்தை உள்ளம் பற்றியது. மேற்கு ஜெர்மன் தலைநகராகிய போன் நகரத்தில் பூபால்ன் என்ற ஈழத் தமிழர்; அவர் மனைவி திருநெல்வேலிப் பெண். மேரி என்று பெயர். அவர்கட்கு ஒரே ஒரு பெண் குழந்தை. இப்போதைக்கு பெயர் கிறிஸ்தி. ஒரு சில நாள்கள் அவர்கள் வீட்டில் விருந்தினராய் இருந்தபோது சுறுசுறுப் பான அந்தக் குழந்தை நன்றாகப் பழகி விட்டது. இக் குழந்தை ஒரு சில மாதங்கட்கு முன்புதான் திருநெல்வேலி யில் தன் தாய்வழிப் பாட்டி வீட்டுக்குப் போய் சில மாதங் கள் இருந்துள்ளது. அங்கே அது அதன் சித்தி முதலானவர் களிடம் பெற்ற அன்பை அதனால் மறக்க முடியவில்லை. நான் ஊருக்குப் புறப்படுகிறேன் என்று தெரிந்ததும் அதற்குத் தன் பாட்டி வீட்டு நினைவு வந்து விட்டது. அதற்கு மெத்தவும் பிடித்தவர்கள் ஒரு சித்தி, ஒரு அத்தை போல இருக்கிறது. அடிக்கடி அவர்கள் ஊராகிய அணைக் குடியில் உள்ள அவர்களை நினைந்து நினைந்து தன் தாயா ரிடம் சொந்த ஊருக்குப் போகலாம் என்று வற்புறுத்தும். நான் புறப்படும் நேரம் பார்த்து என் முன்னே இரண்டு பெரிய பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு வந்து வைத்து அப் பைகளில் தன்னுடைய சின்னஞ்சிறு உடுப்புகள் அனைத்தை யும் ஒடி ஒடி வாரி வாரி வந்து போட்டது. இரண்டு பை