பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 45 களையும் மாறி மாறித் தன் பிஞ்சு விரல்களால் சுட்டி, இந்தப் பை சித்திக்கு; இந்தப் பை அத்தைக்கு மறந்திடாம கொடுத்திடுங்க" என்று திரும்பத் திரும்பச் சொல்லியது; வற்புறுத்தியது. கிறிஸ்டியின் அம்மாவும் கூட அக் குழந்தையின் உள்ளன்பை நினைந்து உருகி ஏண்டி,கிறிஸ்டி உன் உடுப்பு எல்லாவற்றையும் கொடுத்திட்டியே? நீ எதைப் போட்டுக் கொள்வாய்?" என்றார்கள். அதைப்பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. 2. ஈழத்தில் நிகழும் இனப்படுகொலை காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் அயல்நாடுகட்கு அகதிகளாகப் போயுள்ளார்கள். அவரவர்கள் படிப்புக்கும் இயல்புக்கும் ஏற்ப வாழ்க்கை நடத்துகிறார்கள். பாரிசில் ஒரு வீட்டு மாடியில் இரு யாழ்ப்பான இளைஞர்கள் தங்கி இருக்கி நார்கள். அவர்கள் ஒட்டல்களில் இரவு நேரத்தில். இரவு விடுதிகளில் பரிமாறுபவர்களாக வேலை பார்ப்பவர்கள். இரவெல்லாம் கண்விழித்து வேலை பார்க்க வேண்டும். அது மட்டுமல்ல வாடிக்கைக்காரர்களைத் திருப்தி செய்யும் வகையில் உணவுகளையும் குடிகளையும் கொடுத்து மகிழ் விக்க வேண்டும். இது அவர்கள் வீட்டிலிருந்த புத்தகங் களாலேயே விளங்கியது. ஒரு புத்தகம் உயர்ந்த மது வகை களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?’ என்ற பிரஞ்சு புத்தகம், மற்றொன்று உங்கள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்வது எப்படி?’ என்ற பிரெஞ்சு புத்தகம், இன்னொரு புறம் பார்த்தால் ஒரே சீரான அளவுடைய இருபது தொகுதிகள். முதல் தொகுதியை எடுத்துப் பார்த்தேன்; அத்தொகுதிகள் அனைத்தும் பிரெஞ்ச் கற்பதற்காக. அத்தொகுதிகளில் இடையிடையில் கிராம போனில் போட்டுப் போட்டுக் கேட்டுப் பயிற்சிபெறுவதற். கான ஒலித்தட்டுகள். நினைத் கொண்டேன்: ஈழப் போராட்டம் ஏற்படவில்லை என்றால்: இவர்கள் எல்லாம் அயல்நாடுகட்கு வருஷ்ார்களா? அயல் இ.மொழிகனைக் கற்பார்களா? இரவு பகலாகச் ச்ோ ன்றி உழைப்பாச் களா? ஆம்.தீமையிலும் நன்மை இருக்கத்தான் செங்கிறது: