பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 3. ரோம் நகரம் ஒரு வகையில் துன்ப ஒவியம். எப்படி அந்த நாட்டில் கலையும் கொலையும் ஒன்றாக இருந்தன என்பது பெரிய புதிர். ஒரு வகையில் ரோம் நகரை ஐரோப்பாவின் கல்லறை எனலாம். ஏசு கிறிஸ்துவின் சீடர்களும் அவரைப் பின்பற்றியோரும் முதன்முதல் ரோம் நகரத்தில் நுழைந்தபோது அந்த நாட்டில் அப்போது ஆண்ட அரசர்களால் சித்திரவதை செய்யப்பட்டுள் ளார்கள். இப்போதைய ரோம் நகரத்திற்குச் சற்றுத் தொலைவிலே மூன்று இடங்களில் சித்திரவதை செய்யப் பட்டவர்கள் அடுக்கடுக்காய்ச் சதுர சதுரப் பெட்டிகள் போன்ற மண்சுவர் அறைகளில் புதைக்கப்பட்ட பாதாள இடுகாடுகள் உள்ளன. ஒரு இடுகாட்டை அவசர அவசர மாய்ப் பார்த்தாலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாகும். சில அறைகளில் புதைக்கப்பட்டவர்களின் பளிங்கு உருவங்கள் உள்ளன. குப்புற மண்டியிட்டிருக்கும் ஒரு பெண்ணின் கழுத்தில் வெட்டுக்காயம் தெரியுமாறு ஒரு வெண் பளிங்கு உருவத்தைப் பாதாள அறையில் கண்ட போது உலகெங்கும் இருந்து வந்திருந்த பயணிகளின் கண்கள் குளங்களாயின. ஆம். மதவெறியின் கொடுமைகள் இன்னும் தொலையவில்லையே! பேராசிரியர் . சஞ்சீவி கவிஞர் ஏர்வாடி அவர்களே! என்னை நீங்கள் கேட்டது போல் உங்களை நானும் கேட்கிறேன். ஐரோப்பிய பயணத் தில் தங்களைக் கவர்ந்த சுவையான செய்திகள் சிலவற்றை நேயர்களுக்குச் சொல்லலாமே! கவிஞர் ஏர்வாடி 1. கிரீசில் இருக்கும்போது அந்நாட்டுக் கிராமிய நடனத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு ஏற்பட்டது. காணக்கிடைக்கும் இடத்தைக் கேட்டறிந்த போது ஓர் இரவு விடுதியின் பெயரே எனக்குச் சொல்லப் பட்டது. உங்களுக்குத் தெரியாமல் ஓர் இரவு அங்கே