பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 சென்றேன். எடுத்த எடுப்பில் உடுத்திய உடுப்புகளை நீக்கி விட்டு ஆடுகிற நிர்வாண நடனம் முதல் நிகழ்ச்சி. அதை விவரிக்க மாட்டேன்! ஆனால் அதைத் தொடர்ந்து கிரீசின் கிராமிய நடனம்; அந்த இசையையும் நடனத் தையும் கண்டும் கேட்டும் அனுபவிக்க வேண்டும். அந் நடனத்தில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சி, மரக் காலணி அணிந்த பெண்மணி ஒருத்தி அரங்கில் ஆடிக் போது எழுந்த ஒலிலயம் பிறழாத ஒரு மிருதங்கக் கச்சேரியை நினைவூட்டியது. கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் அது ஒரு மிருதங்கக் கச்சேரி நடக்கிற உணர் வையே உண்டு பண்ணும். நான் கண்ணை மூடிக் கொண்டேன். மிருதங்கக் கச்சேரிக்காக மட்டுமல்ல! அந்தப் பெண்ணும் பாவம் சுமாராகவே இருந்தாள்: கிரீசில் பெண்கள் அழகானவர்கள். ஆனால் காபரே பெண்கள் கன்றாவி! - 2. கோர்புத் தீவிலிருந்து ஏத்தன்ஸ் திரும்புகிற வழியில் விமானப் பயணத்தில் ஒரு கிரேக்க நண்பர் கிடைத் தார். வாணிகக் கப்பலில் பணிபுரிகிற அவர் பம்பாய். சென்னை, கொச்சின் துறைமுகங்களில் வந்து இறங்கி ஊர் சுற்றிய அநுபவத்தை விவரித்தார். அவருக்கு இந்தியா பிடித்திருக்கிறது: இந்தியர்க்ளையும் பிடித்திருக்கிறது. ஆனால் இந்திராவை இப்படி அநியாயமாகச் சுட்டுக் கொன்று விட்டீர்களே! என்று கொதித்தார். ஏத்தன்சில் இறங்கியதும் இங்கும் உங்கள் நாட்டைப் போல டாக்விக் காரர்கள் அதிகமாகப் பணம் கேட்பார்கள். மொழி தெரியாத உங்களுக்கு நானே டாக்சி பேசி ஏற்றி விடு கின்றேன் என்று கூறி அவ்வாறே செய்து உதவினார். நாங்கள் வந்து சேர வேண்டிய விடுதிக்கு வந்து சில திமிடங் கள் கூட ஆகியிருக்காது. பெருங்கவிக்கோ சேது ராமன் மறந்து போன பெட்டியைக் கொண்டுவந்து தத்து விட்டு நன்றிக்குக் கூட காத்திராமல் பறந்து விட்டார்.