பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 அதில்தான் சேதுராமனின் பாஸ்போர்ட் (PassPort) இருந்தது. ஒரு நிமிடம் அவருக்கு இதயம் நின்று இயங் கியது. நல்ல மனிதர்கள் எங்கேயும் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். 3. மிலான், ரோம் விமான நிலையங்களில் சுங்க அதிகாரிகளிடம் பட்ட அநுபவங்களை மறக்கவே முடி யாது. என் நண்பர் ஒருவரின் மகள் பாரிசில் வாழ்க்கைப் பட்டிருக்கிறாள். இங்கிருந்து அவரது தாய் என் மூலம் அனுப்பிய பருப்புப் பொடியைப் பார்த்து விட்டு சுங்க அதிகாரிகளுக்குப் பலத்த சந்தேகம்; இது என்ன பொடி என்று அவருக்கு நான் சொன்ன விளக்கத்தில் அவருக்கு நம்பிக்கை இல்லை! மேலும் நான் எடுத்துச் சென்ற என்னுடைய புத்தகங்கள் எதைப் பற்றியது என்று கேட்க நாங்கள் சொன்ன பதிலில் நம்பிக்கை இல்லாமல் துருவித் துருவி பற்பல கேள்விகளைக் கேட்டது அருவருப் பாகவே இருந்தது. இருந்தாலும் அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் கண்ணிலும் மிளகாய்ப் பொடி யைத் துரவிவிட்டுப் போதைப் பொருட்கள் குறிப்பாக ஆசிய நாடுகளிலிருந்து கடத்தப்படுவதை வெட்கத்தோடு ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ரோமிலும் எனக்கு ஒரு விசித்திர அநுபவம். பம்பாயில் இரயில் கூட்ட நெருக் கடியில் என்னுடைய புதிய காலணியின் அடிப்பாகம் கிழிந்து விட்டது. அதைத் தைத்து அணித்து கொண்டேன். ரோம் விமான நிலையத்தில் சுங்க அதிகாரி என் ஒரு ஜோடி மிதியணியில் ஒன்று மட்டுமே தைத்திருப்பதைப் பார்த்து மிகவும் சந்தேகப்பட்டார். 'பவவிதமாக என்னை சோதிக்கத் தொடங்கினார். அருவருக்கத் தகுந்த அந்தச் சோதனைகளைப் பொறுக்க முடியாத நான் என் வங்கி முகவரி அட்டையை அவரிடம் காட்டி, நான் ஒரு வங்கி அதிகாரி, புகழ் பெற்ற எழுத்தாளன், இது போல என்னை நடத்துவது சரியில்லை. இந்தக் காலணியில் சந்தேகம் இருந்தால் இரண்டையும் இங்கேயே விட்டுச் செல்