பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 மனைவியை இழந்து உடல் நலம் இழந்து மனநலமும் இழந்து வருந்திக் கொண்டிருந்த எனக்கு, அந்தச் சீன அழைப்பு சீனி'யாக இல்லை. புறப்படுவதற்குச் சில நாள் முன்வரை பார்க்கலாம், பார்க்கலாம் என்று தலைவர் காமராசர் கையாண்ட தமிழ் நடையையே கையாண்டு வந்தேன். கடைசியாக இருப்பதைவிட எங்கேனும் பறந்து போய் இறப்பதே மேல் என்ற மனச் சுழலில்-சூழலில்பயணமாக முடிவு செய்தேன். இந்த நேரத்திலே என் ஆருயிர் நண்பர் பெருங் கவிக்கோ வா. மு. சேதுராமன் வழக்கம்போல் என்னைப் பார்க்க வந்தார். தொலைபேசியில் ஒரு விமானக் கம்பெனியோடு யா ன் பேசிக் கொண்டிருப்பதைக் கவனித்து விட்டு-வழக்கம்போல் என்னிடம் தயக்கத் துடனும் அச்சத்துடனும் எப்ப ஐயா போகிறீர்கள் ? எப்படி ஐயா போகிறீர்கள்? எவ்வள்வு ஐயா டிக்கட் பணம்?" என்று கேட்டார். ஒரு குறிப்பிட்ட விமானக் கம்பெனியின் பெயரைச் சொல்லிப் பத்தாயிரம் கேட்கிறார்கள்?" என்றேன்; ஐயோ பன்னிரண்டாயிரம் கொடுத்தால் ஏர் இந்தியாவில் சலுகைப் பயணச் சீட்டு சிடைக்கும்" என்றார். அப்படியா என்று அதிசயத்துடன் ஏர் இந்தியா அலுவலகத்திற்கும்-பாரத் டிராவல் சர்விசுக்கும் ஒடினேன். ஆமாம், உண்மைதான் என்று சொல்லி, அவர்கள் வேண்டும் உதவிகளைச் செய்தார்கள். இதெல்லாம் நடந்தது ஜூன் ஏழாம் தேதி-பயணம் ஆரம்பமாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு !