பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 கள்ளிரவில் நட்பும் பகையும் அவசர அவசரமாக என் உலகப் பயணம் ஆரம்பம் ஆகிறது. என் மனதில் மரணம் பற்றிய கவலையும் இல்லை. காரணம் 1983 ஜூன் 3-ஆம் நாள் என் ஒரே மகளின் திருமணத்தை-னங்கள் திருமணத்தினும் முற்போக்கான அரிசனக் கலப்புத் திருமணத்தை என்னால் இயன்ற அளவில் விரைவாகவும் சிறப்பாகவும் செய்து முடித்திருந்தேன் மனைவி இறந்த ஆறு மாதத்துக்குள். கடைசி நாட்களில் என் மனைவிக்குக் கடவுள் நம்பிக்கை போய்விட்டது. :கோயில், கோயில்' என்றும் *சாமியார், சாமியார்' என்றும் என்னோடு அலைந்து கொண்டிருந்தாள் அவள். 1981, நவம்பர், தீபாவளி இரவு தாங்கள் மூகாம்பிகையை வழிபடப் புறப்பட்டதும் அவளுக் காகவே. காரணம் நான் சில மாதங்கட்கு முன்பு அந்தக் கொல்லுர் (?!) போயிருந்தேன். கொட்டும் மழை: அப்படியிருந்தும் அம்பிகையை வழிபட்டு ஜோக் அருவியை வும் பார்த்துவிட்டுத் திரும்பினேன். யான் பெற்ற இன்பப் பேறெல்லாம் என் மனைவியும் பெறவேண்டும் என்பது என் தனிவாழ்வின்-குடும்ப வாழ்வின் ஒரு பெருங்குறிக்கோள். அதற்கு அடுத்த நிலையில் எங்கள் ஒரே மகள் எங்களினும் சிறப்புப் பெறவேண்டும் என்பதுதான். இவ்வுண்மை என் மனைவி உயிருடன் இருந்தபோதே யான் வெளியிட்ட மேங்கல மனைமாட்சி' என்ற சிறு நூலில் பொறித்துள்ள உரிமை உரையால் உணரலாகும். ஆம், கணவன் மனைவி காதலுக்கும்-பெற்றோர் பிள்ளைகள் பற்றுக்கும் சாட்சி கள் கேட்கும் காலம் இந்தக் காலம் !