பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#5 இந்த நிலையில் மூகாம்பிகைக் கோயிலுக்கு என்னை விட்டுவிட்டுத் தானே போனிர்கள் ? என்று என் அன்பு மனைவி வருந்தியதால்-அவள் உள/உடல் நலம் கருதியே கோழிக்கோடு பல்கலைக்கழகக் கூட்டம் ஒன்றின் காரண மாக நான் போக வேண்டியிருந்ததால் அவளையும் முதல் வகுப்பில் அழைத்துச் சென்றேன். ஊழ்வினை என்ற ஒன்றை நம்பவைப்பது போலக் கடைசியாக அந்தக் கூட்டமும் கூடியது; ஆனால் நடக்கவில்லை; பல்கலைக் கழக உட்காரணங்களால், சில மணித்துளிகளில் கூடிய அந்தக் கூட்டம் கலைந்தது. மூகாம்பிகைக் கோயிலுக்குப் போய் ஜோக் அருவியையும் பார்த்து விட்டுத் திரும்பும் போதே-ப்ட்டப் பகலில்-வெய்யில் வேளையில் என் மனைவி நரம்பு அதிர்ச்சி அடைந்து அதிலிருந்து மீளாமலே மாண்டாள் ! அவள் மரணப்படுக்கையில் வீழ்ந்தபோது நல்ல நினைவுடனேயே நவின்ற சொற்கள் நான் கடவுளை நம்பவில்லை" என்பதுதான். சர்வ வல்லமை படைத்தவன் தன்னைத் தொழவந்தவளுக்குத் தந்த பெருத்துன்பம் அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை ! இது தவறு என்று ஆத்திகர்கள்- ஏன் ? நரம்பு மருத்துவ அறிவியலில் சிறந்த சில டாக்டர்களே கூடக் கூறினர். ஆனால் அவளாலும் என்னாலும் இதை முழுமையாக நம்ப முடிய வில்லை; ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மனைவி போனபின்-மகள் திருமணமும் முடிந்தபின்என் உடல் நிலையில் என் தந்தையினும் தமிழுக்கும் தமிழருக்கும் யான் செய்யக் கூடியன எல்லாம் செய்தபின் என்ன கவலை? என் கவலையற்ற மனத்திற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. அது தனக்குவமை இல்லாதான் தாள்" சேர்ந்தமை-அல்லது கண்டமை கூட இல்லை; கண்டால் தான் விள்ள முடியாது; விண்டால்தான் கண்டிருக்க முடியாதே! இவ்வாறு பழமொழியே (பழ மறையே 13) சாற்றுகிறதே! எனவே, என் கவலையற்ற தன்மைக்கு அன்றும்-இன்றும் காரணம் நான் போதுமான ஆயுள்