பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

+ 8 சாத்திரிகளையும் வழியனுப்ப ஒரு நண்பர் கூட்டம் வந்திருந்தது. அக்கூட்டத்தில் யான் நெருக்கடிக் காலத்தில் இடைக்காலப் பதவி விலக்கம் அடைவதற்குத் தூபம் போட்டுத் துணைபுரிந்த ஒரு பார்ப்பனரையும் பார்க்க நேர்ந்தது. நான் குத்துசி போலப் பார்ப்பனத் துவேஷி” இல்லை. ஆனால் வடமொழிக்கும்-வடஆரியக் கருத்து கட்கும் அடிமைப்பட மறுக்கும் தமிழன். என் உறுதி காரணமாக என்னைத் தீர்த்துவிட விரும்பும்-என்னைப் போலவேத் தமிழ்த் துறையில் இருப்போரைக் கொண்டேசன்னால் வளர்க்கப்பட்ட என் மாணவர்கள் நண்பர்களைக் கொண்டே-அவர்கட்குச் சில சலுகைகளைக் காட்டியே-- என்னைத் தீர்த்திட எண்ணும் ஓரிரு பார்ப்பனர்கள் உண்டு. அவர்களுள் ஒருவர் குருக்களையும் சாத்திரிகளையும் வழி பனுப்பக் குடும்பத்துடன் வந்திருந்தார். குருக்களையும் சாத்திரிகளையும் தங்கள் குடும்பத்துடன் நிறுத்தி வைத்துப் பலமுறை நிழற் படம் எடுத்தார், அந்த நெருக்கடிக்கால வீரர் கோவில் குருக்கள் என்மீது அன்புடையவர். எனவே அவர் என்னையும் படம் எடுக்கும் போதெல்லாம் உடன் திற்க வற்புறுத்தினார். வேறு வழியில்லாமல் நெருக்கடிக் கால வீரரும் இசைந்தார். இந்த நெருக்கடிக்கால வீரர் பற்றி ஒரு முக்கியக் குறிப்பினைக் கொடுக்க வேண்டும். இவர் வைதிகத்தை எதிர்க்க எழுந்த சமணப் பணக்காரர் கட்கு உயிர் நண்பர்! குருக்களை எங்கே போகிறீர்கள்?’ என்று கேட்டேன். அமெரிக்காவுக்குத்தான்’ என்று உறவோடு குறிப்பிட் டார். என்ன சேதி?’ என்றதும், எப்போதும்போல் கும்பாபிஷேகம்தான்!” என்றார்; உடன் சாத்திரிகள் எதற்கு? என்றேன். அவர் பெரிய படிப்பாளி பிரவசனம் செய்வதற்கு?’ என்றார். பெருமூச்சு விட்டேன். தமிழா! அமெரிக்கத் தமிழர்கள் உன்னைத் திருக்குறள் பற்றியும், சங்க நூல்கள் பற்றியும், சிலப்பதிகாரம் மணிமேகலை பற்றியும், பன்னிரு திருமுறைகள் திவ்வியப் பிரபந்தங்கள்