பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 பற்றியும் விரிவுரைகள் ஆற்ற அழைக்கும் நாள் எந்நாளோ? நீதான் உன் உடன் பிறப்போடேயே அழுக்காற்றால்அவசரத்தால் போரிட்டு மடிந்(த்)துவிட முடிவு கட்டி விட்டாய் போலிருக்கிறதே! நான்கூட பிராமணனாய்ப் பிறந்திருந்தால் இளமையிலேயே சமஸ்கிருதம் படித்திருந் தால்-காட்டிக் கொடுக்கும் திராவிடச் சாதியில் பிறவாமல் இருந்திருந்தால் - எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும் போலிருக்கிறதே! நாத்திகம் பேசினாலும் திராவிடனாய்ப் பிறந்து நாத்திகம் பேசுவதினும் ஆரியனாய்ப்-பார்ப்பன னாய்ப்-பிறந்து நாத்திகம் பேசினால் அதிக மதிப்பு. இருக்கும் போல் இருக்கிறது. என்ன பாவம் செய்து தமிழனாய்-பிராமணன் அல்லாதானாய்ப் பிறந்தேனோ ? கோவில் குருக்கள் திவான்பகதூர் டி. எம். நாராயண சாமிப் பிள்ளையின் வளர்ப்பு மகன்' என்ற காரணத்தால் என்னை வலிந்து வலிந்து அழைத்து-இழுத்துத் தன் பக்கத்திலேயே வைத்துக் கொண்டார். விமான நிலைய அதிகாரிகளுள் ஒருவர் பம்பாய்க்குப் போயிங்கில் இடம் ஒதுக்கும் அதிகாரம் படைத்த ஒருவர்-குருக்களை விழுந்து வணங்கி இங்கேயே உட்காருங்கள்-கால் நீட்டிக்கொண்டு உறங்குதற்கு வசதியான இடம் தருகிறேன்" என்றார். குருக்கள் திவான்பகதூர் பிள்ளை அவர்கள் தம்மீது வைத்த, அன்பை எல்லாம் என் மீது பொழிவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். எனவே அதிகாரியிடம் இவருக்கும்" என்று பல்ல்ெல்லாம் காட்டி வேண்டினார்! எனக்கே என்னவோ போல் இருந்தது! அதிகாரியோ அப்படியே! தங்கள் பக்கத்திலேயே" என்றார்! பூவோடு சேர்ந்த நார் ஆனேன்! கடவுளை நம்ப மறுக்கிறாயே! பார்த்தாயா இதுதான் கடவுள் செயல்! இல்லாவிட்டால் இந்த நாள் இந்த விமானத்தில் உன் தந்தை"யாருக்கு வேண்டிய இந்தக் குருக்கள் உன்னை வழியனுப்ப வந்து உதவுவதுபோல்