பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வருவானேன் என்கிறீர்கள் அல்லவா? இது தற்செயலா?* "தெய்வச் செயலா?’ என் மனம் குழம்புகிறது!-இல்லைதெளிகிறது? : நான்தான் பகுத்தறிவு என் கைவாள் : கடவுள் நம்பிக்கை என்கேடயம்!’ என்றுதானே சொல் கிறேன். என் கடவுள் நம்பிக்கை, ஆயுள் காப்பு உறுதிச் சீட்டுப் போலத்தான் என்றுதானே சொல்கிறேன்! நான் சொல்வதென்ன? வேலிக்கு ஒனான் போல என் ஆருயிர் நண்பர் டாக்டர் அவ்வை துரை. நடராசன் சாட்சியாக, எண்பது வயதுக்கு மேற்பட்ட திரு. பெ. ந. அப்புசாமி ஒரு சில நாள்கட்கு முன்புதானே உயிர் என்றும் கடவுள் என்றும் தனியாக உடலை-உலகைக் கடந்து ஒ ன் து: இல்லை என்று ஓங்கி உரைத்தார்? ஏன்? இன்று (10-5-83) காலை கூட என் வீட்டிற்கு வந்த முதுபெரும் புலவர் அ. கு. ஆதித்தர் வினை-பிறவி-கடவுள் என்பதெல்லாம் மனிதனை அ ச் சு று த் தி நல்வழிப்படுத்த கட்டப்பட்ட கட்டுக்கதை" என்கிறாரே! இப் பழந்தமிழ்க்கிழம் நாளும் மயிலையிலிருந்து திருவல்லிக்கேணி போய் அரசடி கற்பகத் தை வணங்கும் வழக்கம் உடையவர் ஆயிற்றே ! பக்கத்திலிருந்த படித்த சாத்திரியாரிடம் பணிவுடன் "சாமி உயிர்போகும் பிரச்சினை: உயிர் என்றும் கடவுள் என்றும் தனியே உண்டா? என்ன நிரூபணம்?' என்று ஆர்வமுடன் கேட்டேன்? சாத்திரியார் கண்கள் சுழன்றன: சொருகின! வாய் கொட்டாவி வி ட் - து! நள்ளிரவு! போயிங் விமானம் கும்மிருட்டில் பம்பாய் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது! நானும் கொஞ்ச நேரம் தூங்கினேன்: பம்பாயில் விமானம் பொத்தென்று இறங்கியதும் குருக்களும் சாத்திரிகளும் அமெரிக்க விமானத்தை நோக்கி ஓடினர்! நானோ மறுநாள் மாலை பம்பாயிலிருந்து கல்கத்தா-பாங்காக்-ஆங்காங் போகும் விமானத்தில் ஏறத் தவம் புரியும் பொருட்டுப் பம்பாயில் ஏர் இந்தியாவே ஏற்பாடு செய்திருந்த நட்சத்திர ஒட்டல் ஒன்றுக்கு நகர்ந் தேன்!