பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகாலை ஆங்காங் சஏர் இந்தியாவே ஏற்பாடு செய்திருந்த நட்சத்திர ஒட்டலுக்கு நா ன் போவதற்குள் விடியற்காலை மணி நான்காகி விட்டது. தனியாளாக என்னுடைய பெட்டிகள் புத்தகக் கட்டுகள் (அன்பளிப்பிற்காக), மருந்துப்பை, சில்லரைச் சாமான்கள்மூட்டை.இவற்றையெல்லாம் நானே. தனியாளாக-முன்பின் பழக்கம் இல்லா நிலையில்-சக்கரத் தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு ஒவ்வோரிடமாக எங்கே தங்குவது?’, அதற்கு அனுமதிச் சீட்டு எங்கே வாங்குவது? நட்சத்திர ஓட்டலுக்கு எப்படிப் போவது" என்றெல்லாம் விசாரித்து விசாரித்துச் சாமான்களோடு மாடிக்கும் கீழுக்குமாக அலைந்து விளக்கம் பெறுவதற்குள் படாதபாடு ஆகிவிட்டது. யாரைப் பார்த்தாலும் அச்சம்; ஐயம்: திருட்டுப் பயம்; ஏமாற்றி விடுவார்களோ என்ற கலக்கம், அப்பப்பா! பயணம் போனால் தனியே போகக் கூடாது. அப்படிப் போனாலும் நாமே தூக்கக் கூடிய ஓரிரு கைப்பெட்டிக்கு மேல் எடுத்துச் செல்லக் கூடாது. அந்தப் பெட்டிகளும் அடியில் சிறுசிறு சக்கரம் வைத்தவை களாக இருக்க வேண்டும். அப்பெட்டிகளில் இருக்கும் கயிறு ஒன்றைப் பிடித்துக் கொண்டே நாட்டுப்புறங்களில் மாடு கன்றுகளை நகர்ப் புறங்களில் நாய்க்குட்டிகளை . ஏன்பெரிய நாய்களை இழுத்துச் செல்வது போல் இழுத்துச் சென்று விடலாம். பயணம் என்ற சொல்லிற்குள்ளேயே கங் கா ரு க் குட்டிகள் போல் பணம்’, பயம் எ ன் ற சொற்கள் உள்ளன. பயம் என்ற சொல்லுக்கு அச்சம் என்ற