பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பொருளோடு பயன்' என்ற பொருளும் இருத்தல் கருதத் தக்கது. சற்று எழுத்து மாற்றம் செய்தால் பயணம் *பணயம் என்றும் ஆகும்: நான்தான் பெரிய முட்டாள் ஆயிற்றே! என் இனிய எதிரிகள் அடிக்கடி என்னிடம் இரக்கப்பட்டு நடிப்பாக வேனும் சொல்வதுபோல் உ ல க அனுபவம் இல்லாத வனாயிற்றே! வாழ்க்கையை எதிலும் லேசாக எடுத்துக் கொள்ளாமல் கனமாக எடுத்துக்கொள்பவன் ஆயிற்றே! பஞ்சு மூட்டையில் பலமுறை முட்டிப் பயில்வான்’ என்று பட்டம் எடுக்கத் தெரியாமல் பாறையில் ஒரு முட்டு முட்டி என் பச்சை இரத்தமே என்னைப் பார்த்துச் சிவப்பாய்ச் சிரிப்பதைக் காண்பவன் ஆயிற்றே! ஒரே ஒரு உதாரணம் இப்போதே சொல்வதுதான் சரி. என்னுடைய 55 நாள்-5 நாடுகள் பயணத்தில் நான் பயன்படுத்தியது எல்லாம் 5 வேட்டி 5 சட்டைக்கு மேல் இல்லை. இதுவும் ஆங்காங் கிலும், சைனாவிலும், ஜப்பானிலும்தான்.காரணம் இவை யெல்லாம் ஆ சி ய நாடுகள்.ஆங்காங்கு ஒரிரு நண்பர் களேனும் இருந்தார்கள் உடன் வர. ஜப்பானை விட்டு. டோக்கியோவை விட்டு ஜூலை 15-ஆம் தேதி புறப் பட்டவன் ஆ க ஸ் டு எ ட் டா ம் தேதி சென்னை திரும்பும்வரை 23 நாட்கள் ஒரே பாண்டு (Pant) தான் ! ஒரே புஷ் ஷர்ட்டுதான் ! உங்களால் நம்ப முடிகிறதா ? {அந்தப் பாண்ட்டையும் புஷ் ஷர்ட்டையும் ஓராண்டு கழித்து நேற்றுதான் என் மகள் சலவைக்குப் போட்டு வாங்கினாள்). நம்ப முடிந்தாலும் நகைப்பாய் இல்லை? : ஆம். இளமையிலேயே அடியேன் பரதேசி’ (இரு பொருளிலும்) விருப்பம் உடையவன் ஆயிற்றே. அப் பொழுது மற்றதெல்லாம் வீண்சுமைதானா ? சுமையே தான் : சுமை மட்டுமல்ல லண்டனில் மட்டும் ஏர் இந்தி யாவையே சேர்ந்த ஒரு கிழ ஆங்கிலப் பெண் அதிகாரியின் கண்டிப்பால் நூறு ரூபாய் அளவுக்கு அபராதமும் கட்டி