பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 னேன். உங்களுக்கு ஒரு கேள்வி கேட்கத் தோன்றலாம். ஆமாம்! இவ்வளவு நாள் ஒரே பாண்ட் கோட் போட்டால் புழுக்கத்தாலும் புழுதியாலும் அழுக்காகி விடாதா என்று: ஆம். சரியான கேள்விதான், ஆனால் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் நம் நாட்டைப் போல் புழுதி ஏது? புழுக்கம் ஏது ? இன்னொரு கேள்வி உங்கட்குக் ாேட்கத் தோன்றலாம். அப்படி யானால் அந்த நாட்டு மக்களெல் லாம் உங்களைப் போல் வாரக் கணக்காக ஒரே ஒரு பாண்ட்டும் புஷ்கோட்டும்தான் போடுவார்களா? என்று. அந்த நாட்டு மக்களெல்லாம் என்னைப் போல் ஏதோ கொஞ்சம் இருந்தும் பரதேசிகள் இல்லை! இல்லாமலும் பரதேசிகள் இல்லை; நான் ஒரு பழமொழியைச் சற்று மாற்றிச் சொன்னால், பரம்பரையில் ஆண்டி பஞ்சமில்லா விட்டாலும் ஆண்டி. சிலம்புச் செல்வர்தான் அடிக்கடி ஒன்று சொல்வார்; வறுமைவேறு; வறுமைப்புத்தி வேறு: வறுமை இருக்கலாம்; வறுமைப்புத்தி கூடாது' என்று. (சென்ற ஆண்டு 26-ந்தேதி சைனாவில் இருந்தபோது இவரை அடிக்கடி நினைவு கூர்ந்தேன்; என் பொது வாழ்வுத் தந்தை" அல்லவா?) நம் நாட்டு வேதாந்தம் அல்லது சமய நம்பிக்கைகளில் ஒரு வகையே செல்வச் சீமானாய் இருந்தாலும் தோற்றத்தில்-தோற்றத்தினும் மன நினைவில் - வாழும் வாழ்க்கையில் - வறியவனாய் வாழவேண்டும் என்றுதானே செப்புகிறது: இந்து மதத்தினும் பல மடங்கு அதிகமான புராணக் கதைகளையும் கற்பனைகளையும் கொண்ட பெளத்த மதம் தன்னைப் பின்பற்றுபவர்கள் அரசர்களாய் இருந்தா லும் அவ்வப்போது ஆண்டிகளைப் போல வாழ வேண்டும் என்றே வற்புறுத்துகிறதே! சென்ற சில நாட்களுக்கு முன்பு சென்னை மகாபோதி சங்கத்தில் அடியேன் புத்தர் பிறந்த-ஞானம் பெற்ற-மறைந்த- முப்பெருநாளில் பேச அழைக்கப்பட்ட போது அதுவரை காணாத காட்சி