பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 ஒன்று கண்டேனே! மூன்று மாதமே புத்தத்துறவியாக இருந்து முதல் படியாகத் தன்னைச் சோதித்துப் பார்க்க”ப் போகும் ஒரு மகன் மொட்டை அடித்து வெள்ளாடை அணிந்து கொண்டு தன் பெற்றோர்களை விழுந்து வணங்கி அவர்கள் கையாலேயே காவி உடைகள் பெற்றார்: இல வினாடிகளில் உள்ளே போய்க் காவி உடை அணிந்து வந்து நின்றதும் அவர்தம் கால்களில் அவர்தம் பெற்றோர்கள் விழுந்து வணங்கினார்களே இந்து மதத்திலும் இப்படிப்பட்ட காட்சிகள் இருக்கும்!) பம்பாய்க்குப் போய்விட்ட என் மனம் மறுபடியும் எங்கெங்கே எதை எதையோ மேய்ந்து விட்டுச் சென்னைக்கே வந்து விட்டது பார்த்தீர்களா? தொழு(வ) மாட்டுப் புத்தி! அப்படி ஏன் உங்களையே நீங்கள் தாழ்த்திச் சொல்கிறீர்கள் என்கிறீர்களா? எங்கள் ஊரில். அறந்த ஊரில்-இரு பழமொழிகள் உண்டு.என் மனைவி அடிக்கடி சொல்லுவார். அவற்றைச் சொல்லாம் என்று நினைக்கிறேன்? 'ரங்கர் ஊரெங்கும் சுத்தினாலும் ஒரங்கம்தான் வரனும்; ஊரெல்லாம் சுற்றி எங்க ஊர் முக்தி” இப்பழமொழிக்கு வேறு பாடபேதங்களும் இருக்கலாம். எப்படியோ ஒரு வகையாக இரந்து இரந்து செய்தி களையும் வழிகளையும் தெரிந்து கொண்டு ஏர் இந்தியா ஏற்பாடு செய்திருந்த நட்சத்திர ஓட்டலுக்குப் போனேன் . இருட்டில். பெட்டிகள், பைகள், புத்தகக் கட்டுகள் ஆகிய வற்றோடு எந்தப்பெட்டிக்குள்ளும் அடக்க முடியாத கனம் நிறைந்த கம்பளிக் கோட்டு ஒன்றையும் குடுகுடுப்பைக் காரன், பூமாட்டுக்காரன் போலச் சுமந்து கொண்டிருந் தேன். எதையும் விட்டுவிடாமல் எப்படியோ எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டு இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்த நட்சத்திர ஓட்டலுக்குள் நுழைந்தேன். உலகம் உறங்கினும் உறங்கா உவகைமிக்க ஆண்களும்