பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 ஆண்களைவிடப் பெண்களும் அங்கே வேலை செய்து கொண்டிருந்தனர்; இந்திரபோகக் காட்சியாக இருந்தது. எனக்கு உரிய அறையையும் அதன் அழகையும் பெருமை யையும் காட்டுவது போன்ற பெரிய பொன்னிறத் திறவு கோலையும் தந்தார்கள். ஏசி (Air Condition) அறையில் "ஒசி"யில் தங்குவது போன்ற உணர்வு என்னைக் கிளு கிளுப்பூட்டியது! வாழ்க ஏர் இந்தியா CENTAR ஒட்டல்: முன் நாள் இரவு கண் விழித்தமையால் உறக்கம் அழுத்தியது; 5 நட்சத்திர ஒட்டல் ஆதலால் பகல்போல் நிலவு; கற்பனைக்குப் பஞ்சமில்லை. ஒரு நிகழ்ச்சி: அறைமணி அடித்தது; அறை உறக்கத்தல் கதவைத் திறந்தேன். ஒர் இளம் பெண் (ஏதாவது வேலை என்ற பொருளில்) any services" என்றாள்|ர், பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பது போலப் பார்த்தேன்: அசடு வ ழி யு ம் என் முகத்தைப் பார்த்து விட்டு அருவறுப்பாலோ இவன் என்ன மாந்திரிகனோ என்று என் தாடிக்கோலமாகிய தவக்கோலத்தைப் பார்த்து விட்டுப் பயந்தோ பைய (=மெல்ல) நகர்ந்து விட்டாள் அப்பெண். கொஞ்ச நேரம் தூங்கிவிட்டு ஒட்டலை ஒரு முறை சுற்று (Circular) மாடிப் பாதை வழியாகவும் மற்றொரு முறை சுற்றுத்தளப் பாதை வழியாகவும் வலம் வந்து பார்த்தேன்! வட்ட வடிவில் கட்டப் பட்ட ஒட்டல்! மேலேயும் சரி கீழேயும் சரி ஒரு சுற்றுச் சுற்றி விட்டுப் புறப்பட்ட இடத்திற்குத் திரும்பி வந்து விடலாம். ஆமாம் உலக உருண்டை போலத்தான் அந்த ஒட்டலும்! என் உலகப் பயணத்தை அழகாக நினை ஆட்டியது அது இடையிலேதான் நீச்சல் குளம், அழகு நிலையம், நீராவிக் குளியல் (Steam path) அறை, நகைக் கடை, புத்தகக்கடை, அழகுப் பொருள்கடை, பலநாட்டுப் பலநிறத்துப் பலவகை அழகினரும் உணவு உண்ணும் கூடம், வரவேற்புக் கூடம் எல்லாம்! இதையெல் லாம் பார்க்கும்போது எல்லாம் நமக்காகத்தான்! 3208–2