பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தம்முடையதுதான்" என்று நினைப்பது என் வழக்கம். அந்தப் போலி நினைப்பில்தான் எவ்வளவு இன்பம்! ஆமாம். இந்த உலகில் இன்னும் காற்றுக்கும் கற்பனைக்கும்தான் யாரும் வர் போடவில்லையே! ஒரு காலைச் சிற்றுண்டியும் ஒரு நண்பகல் விருந்தும் (lunch) ஏர் இந்தியா இலவசமாகத் தருகிறது-இந்த எண்பது நாள்களில் உலகைச் சுற்றி பயணச்சீட்டிற்குஅதுவும் உடனே விமானத் தொடர்பு இல்லாத போதுஇல்லாத இடத்தில்! நான் அடுத்துப் போக வேண்டிய இடம் ஆங்காங். அதற்கு மறுநாள் மாலைதான் விமானம், இந்தத் தாமதத்தால் கிடைத்த பயன்தான் பம்பாய் நட்சத்திர ஒட்டவில் சில மணிநேர-பாதி இரவு, பாதி பகல்-எல்லாம் பாதி பாதி தான்!-சுகபோகம். ஆமாம் என் போன்றோர் நிலைக்கு இதுவே பெரிய சுகபோகம் அல்லவா? நட்சத்திர ஒட்டல்களில் நகத்தில் அழுக்குப்படாமல் வாழ-வாழ்ந்து மகிழ-எவ்வளவோ வசதிகள். குடி, கூத்தி எல்லாச் சுகமும் கிடைக்கும். அந்த ஒட்டலில் பல அறைகளில் "தொந்தரவு செய்யாதீர்கள்?" என்ற çurg5sifié *Please Don't Disturb^ srgit p ua) sy& GA5TÉiæ; விடப்பட்டிருக்கும். நல்லது, கெட்டது இரண்டுக்கும் தொந்தரவுக் கூடாது அல்லவா? ஒட்டலைச் சுற்றிச் சுற்றி வந்த நான் என் அறைக்குள் இருப்பவற்றை எல்லாம் ஆராய்ந்தேன். தங்குவோரைப் படிக்க- இல்லை-- பார்க்கவாவது துண்டும் பகவத்கீதை, பைபிள் (இதை யெல்லாம் நம் எம். எல். ஏ., எம். பி., அமைச்சர்கள் எத்தனையோ முறை பார்த்திருப்பார்கள்! ஆனால் தமிழக அரசு நடத்தும் ஒட்டல்களிலும் பயணியர் விடுதிகளிலும் பெரிய ஒட்டல்களிலும் திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்போடு கூடிய ஒரு புத்தகத்தை வைக்கலாமே. மூவேந்தர்கட்கே எட்டாத எண்ணம் இவர்கட்கு எப்படி