பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 எட்டும்?) சோப்பு, சீப்பு சிறுபொருள்களிலிருந்து குட்டிக் குளிர்பதனப் பெட்டி (Fridge) வரை பலவும் அறையில் நிறைந்திருந்தன. காலையில் கதவடிச் சந்தின் வழி இலவச மாகத் தள்ளப்படும் ஆங்கில நாளேடு வேண்டும் போது விரும்பிய இசை கேட்கப் பலவழி இசை ஒலி பரப்பு : ஆனால் அனுபவிக்கத்தான் காசும் இல்லை; காலமும் இல்லை; கட்டுக் கழுத்தியும் இல்லையே! காலைச் சிற்றுண்டியையும் நண்பகல் விருந்தையும் முடித்துக் கொண்டேன் - மிகுந்த எச்சரிக்கையோடு. காரணம் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் ஒரு காப்பி" குடித்தாலும் கட்டணம் பத்து ரூபாய் ! மாலை ஆறுமணி அளவிலேயே புறப்பட வேண்டிய விமானத்திற்கு வழக்க மான கூடுதல் முன்னெச்சரிக்கையோடு மாலை மூன்று. மணிக்கே தயாராகி விட்டேன்! தங்கியிருந்த அறையில் எந்த எந்த உதவிக்கு எந்த எந்தத் தொலைபேதி எண்ணுக்குக் கூப்பிட வேண்டும் என்ற அழகான குறிப்ர் அட்டை இருந்தது. என்னிடம் தனியே இருந்த சில புத்தகக் கட்டுகளை ஒன்றாகக் கட்டி வாங்கிக் கொள்ள லாம் என்று சரக்குக் கட்ட (Package) உதவும் ஆளை வரச்செய்யும் எண்ணைச் சுழற்றினேன். உடனே பெரிய ஆபீசர் போன்ற ஒருவர் கையில் அழகான சரக்கு கட்டும் தாள்களுடன் பந்தாகச் சுற்றிய நாடாக் கயிற்றுடன் வந்தார். என் புத்தகங்களை ஒன்றாகக் கட்டித்தர வேண்டி னேன். அவர் உடனே 0, K என்று சிலமணித் துளிகளில் மிக அழகாகப் பொட்டணம் செய்து தந்தார். அதுவுமேகூட எனக்கு மிகப்பெரிய அழகாகவும் மகிழ்வாகவும் இருந்தது. பம்பாயில் இரண்டு விதமான நிலையங்கள் உண்டு. ஒன்று உள்நாட்டுப் பயணத்திற்கு; மற்றொன்று வெளி நாட்டுப் பயணத்திற்கு. ஒட்டலிலிருந்து மாறும் (Transit) விமானப் பயணிகளை இலவசமாக ஏற்றிச் செல்லும் பேருந்தில் வெளிநாட்டுப் பயணத்திற்காக (அதுவரை உள் நாட்டுப் பயணம்தானே!) விமான நிலையம் போய்ச்