பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சேர்ந்தேன். அங்கே இருந்த சுங்கவரி இல்லா மது-ஆடம் பரப் பொருள்களை எல்லாம் விற்கும் கடைகளை எட்டி விருத்தே பார்த்தேன், விமானம் புறப்படும் நேரம் நெருங்க ம்ே வழக்கம் போலப் பயணச் சீட்டுகளைக் காட்டி விமானம் ஏறும் அட்டைகளை (Boarding Cards) வாங்கிக் கொண் டேன்; பளு சாமன்களுக்கு உரிய டபggage அட்டைகளை பும் வாங்கிக் கொண்டேன். ஆமாம். ஒரு சிறு கைப் பெட்டியைத் தவிர பாரமான சாமான்களை விமானம் தன் பெருவயிற்றில் தூக்கிக் கொண்டு வரத் தனியே கொடுத்து விட வேண்டும். ஆட்களையும், சாமான்களையும் சேர்த்து ஒரு விமானம் சுமக்கக் கூடிய பாரம் இதற்குமேல் இருக்கக் கூடாது என்ற கணக்கும் இருக்கிறது ! ஆம். அளவறி தல்தானே பேரறம்: சென்னையில் குருக்கள்-அடிக்கடி அயல்நாடுகட்குக் கும்பாபிஷேகத்துக்குப் போகும் குருக்கள்-காட்டிய வழியை மறவாமல், விமானம் ஏறும் டிக்கட்டுகளை வழங்கும் பெண்மணியிடம் முதலில் போய் அம்மா, கால் வலி அதிகம்; விமானத்தின் நடுவில் இருக்கும் கதவுப் பாதையை ஒட்டிய வரிசையில் சன்னல் ஒரம் உட்கார டிக்கட் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டேன். இது எனக்கு எப்போதும் வழக்கம், பகலோ இரவோ சன்னல் ஓரமாக உட்காருவதையே - அதுவும் ஆவரோ, சின்ன போயிங் (ஏர் பஸ் அல்லாதது) விமானங்களில் இடம் அல்லது வலப்புறம் உள்ள கடைசி வரிசை சன்னல் ஓரச் சீட்டுகளையே யான் விரும்புவது வழக்கம், காரணம்?............நேரில் மட்டுமே சொல்வேன்! இதற்கிடையில் ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொருவரிடம் (பெரிதும் அயலாரிடம்) நட்புக் கொண்டு புதிய புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ளும் பழக்கம் கொண்ட நான் அயல் நாட்டவராகக் காணப்பட்ட ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன். பாவம் அவர் ஒரு பாலத்தீனியர்