பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 என நினைக்கிறேன். அவர் முதல் நாளே டெல்லி வந்து விட்டாராம்; பாங்காங் போகிறாராம். அங்கே அவர் தன் நாட்டுக்கு வந்திருந்தபோது காதலித்துக் கட்டிக் கொண்ட மனைவி இருக்கிறாராம்; ஒரு குழந்தையும் இருக்கிறதாம்! முன் இரவு டில்லி விமான நிலையத்தை விட்டு வெளியேறவும் அவரைச் சுங்க அதிகாரிகள் அனும திக்கவில்லையாம்; எவ்வளவோ கெஞ்சியும் அதிகாரிகள் இரங்கவில்லையாம்; அவரும் அயல் நாட்டுப் பயணிகள் பகுதியை விட்டு இறங்கவில்லையாம்; குளிக்க வில்லை யாம்; குடிக்கவில்லையாம். மனைவியைக் காணப் போகி றாராம்! மனைவியை இழந்த நானோ எவரெவரையோ எங்கெங்கேயோ காணப் புறப்படுகிறேன். பம்பாயில் விமான நிலையத்தில் அங்கும் இங்கும் எங்கும் நகர முடியவில்லை. சாமான்களைப் பார்த்துக் கொள்வதே பெரும்பாடாக இருந்தது. இரண்டாவது; பார்த்தால் எதையும் வாங்குவதற்குப் பணமும் இல்லை. இருந்த பணத்தைச் செலவழிக்காமல் பார்த்துக் கொள் வதே பெரும்பொறுப்பாக இருந்தது. விமானம் புறப்படும் நேரம் நெருங்கியது. இதை ஒட்டி ஏற்பட்ட இரு அனுபவங்கள்-உலகப் பயணம் முழுதும் தொடர்ந்து வந்த-தொடர்ந்திருந்த இரு அனு பவங்கள் இங்கே நினைவுகூரத்தக்கன. ஒன்று சென்னையி லும் கூட இல்லாத-பம்பாய் முதலிய பெரிய விமான நிலையங்களில் இருக்கும் இரு வசதிகள். ஒன்று, தானே உயரும் மாடிப்படி (Escalcater). இது முப்பது நாற்பது படிகள் கொண்ட வரிசை; மெல்ல மேலே நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரத்தில் இருக்கும் கைப்பிடியை லேசாகத் தொட்டுக் கொண்டு நிலைக்குத்தாக-எச்சரிக்கை யாக மெல்ல நகரும் முதற் படியில் நின்று கொண்டால் சில நொடிகளில் மேல்தளத்துக்குக் கொண்டுபோய் விட்டு விடும். கொஞ்சம் கவனமில்லாமல் நின்றால் அல்லது கைப்