பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பிடியைக் குரங்குப் பிடியாய்ப் பிடித்தால் நகரும் முதற் படியில் கால் வைத்ததும் சமநிலை (Balance) இழந்து ഖി.ു. நேரிடும் அல்லது மேல்தளத்தில் நகரும்படித் தொடும் போது தளத்தில் கால் ஊன்றத் தெரியா விட்டால் கால் விரல்கள் இடித்துக் கொள்ள நேரிடும். நான்தான் பெரிய பெரிய ஆபத்துக்களில் எல்லாம் தப்பி வந்துள்ளேனே! அதனால் கொஞ்சம் தள்ளாடினாலும் சமாளித்துக் கோண்டேன். * . ; விமானத்தில்-பெரிய வீடு போன்ற ஏர் இந்தியா விமானத்தில் ஆம் என் நெடுநாள் ஆசைக் கனவாகிய "ஜம்போ'வில் அதுவும் ராஜேந்திர சோழனில் நட்ட நடுப்பகுதியில்-நெருக்கடி நேரக் கதவு(த்திறப்பு) அருகில் இடப்புறம் முதல் வரிசை சன்னல் ஒர இருக்கையில் உட்கார்த்து கொண்டேன். ராஜேந்திர சோழன் என்ற பெயரே என்னையே ராஜேந்திர சோழன் ஆக்கியது. ஊடே ஒரு ஜயமும், ராஜராஜ சோழன்’ என்ற பெயர் ஏன் இல்லை தலைவர் கலைஞர் போற்றினார் என்பதாலோ ? விமானம் பம்பாயில் இருந்து கல்கத்தாவை நோக்கிப் பறக்கத் தொடங்கியது. ஆம் இந்தியாவின் மேற்கு நுழைவாயிலில் (Gateway of india) இருந்து கிழக்கு நுழைவாயிலாகிய கல்கத்தாவை நோக்கி ஒரே நெட்டாகப் பறந்தது விமானம், விமானத்தில்-பெரிய விமானம்-வீடு போன்ற விமானம்-விமானப் பேருந்து AIR BUS விடப் பெரிய விமானப் பெரு வீடு அல்லது இரட்டைப் பேருந்து விமானம்-அல்லவா? மது, மங்கை-மயக்கம்-திரைப்படம் எல்லாவற்றிற்கும் இடம் உண்டு புதிய சூழல்-உறக்கம் வரவில்லை; அயர்வு-உறக்கமும் வந்தது! ஏர் இந்தியா விமானத்தில் ஒரு சிறந்த வசதி உண்டு. காதில் பொருத்திய மெல்லிய தொலைபேசி மென் குழாய்கள் வழியாகவே, நான்கு வகை இசைகளை நம் வானொலிப் பெட்டியில் முள்ளை நகர்த்தினால் கேட்பது போலத் திருகைத் திருகத்