பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3? திருகக் கேட்கலாம். பலவகை (முக்கியமாக ஐரோப்பா, வடஇந்தியா) இசைகளைச் சிலபோதும் தமிழிசையைப் பலபோதும் கேட்டுக் கொண்டும் கேளாதே துரங்கிக் கொண்டும் இருந்தேன். கல்கத்தாவை அடுத்து பாங்காங்கில் விமானம் இறங் கியது; வெளிவிளக்குகள் மட்டும் நகரத்தை அடையாளம் காட்டின. எவ்வளவோ காலம் பார்க்க விரும்பியும்-விசா இருந்தும்-உடனுக்குடன் விமான வசதி இல்லாததால் இறங்கிப் பார்க்க முடியவில்லையே என்று ஏங்கினேன். ஏக்கத்திலேயே தூக்கம் அழுத்தியது. அதிகாலைபாவேந்தர் பாடிய பின்வரும் ஒப்பற்ற உவமையை நினைவு படுத்தும் வகையில் - தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருந்ததன் கட்டுக் குலைந்தது புலக் திடப் போகும் பொழுது அரையுறக்கத்தில் இருந்த என் காதில் கருமாரி அம்மன் பாட்டும் கலைமகளாம் எம்.எஸ்ஸின் சுப்ரபாதமும் ஒலித்துக்கொண்டிருந்தன. அரையுறக்கத்தில் இருந்த யான் புதையல் கண்டவன் போல் விழித்துக் கொண்டேன். ஆ ! ஆ ! என்ன அழகான காட்சி! இயற்கையும் செயற்கையும்இணைந்து இன்புறுத்தும் காட்சி செயற்கையும் இயற் கையின் எட்டத்து உறவுதானே ! தீவு தீவுகளாகத் தெரியும் காட்சி! தென்னை, பனை, கமுகு போல் உயர்ந்து உயர்ந்து தெரியும் கோபுர உச்சிக் கட்டடங்கள் ! பார்த்தாலே ஆசிய நாகரிகம் அகன்று அமெரிக்க நாகரிகம் உதயமாகும் உள்ளங்கவர் காட்சி ! ஒர் அரை மணிநேர அளவுக்கு ஆகாய விமானத்திலிருந்தே ஆங்காங்கை மெல்ல மெல்லப் பார்த்து மகிழும் வாய்ப்பான வளமான காட்சி : வாழ்க்கைப் பேறெல்லாம் வடிவெடுத்து வந்து விட்டது போன்ற வண்ணம் : எண்ணம் : அடிக்கடி அட்லாஸ் பார்த்து