பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நால்- மூ - நீர் நாடு உலகத்து நாடுகள் நிலப்பரப்புகள் ஒவ்வொன்று றுக்கும் நாற்பால் எல்லைகள் இருத்தல் இயல்பு. ஒரு புறம் மட்டுமே நீர்ப்பரப்பு; இருபுறங்களில் நீர்ப்பரப்பு; முப்புறங் களில் நீர்ப்பரப்பு: நாற்புறமும் நீர்ப்பரப்பு என நால்வகை நில-நீர் நிலைகள் உண்டு. இலங்கை போல் நாற்பாலும் நீர் சூழ்ந்த நிலத்தைத் தீவு என்றும் இந்தியா போல் முப்பால் நீர் சூழ்ந்த நிலத்தைத் தீபகற்பம் என்றும் வழங்கு வர். இவற்றை முறையே நால்நீர் நிலம் என்றும் முநீர் நிலம் என்றும் தமிழ்ப்படுத்தலாம். அந்நிலம் தனி நாடானால் நாடெனவே நவிலலாம். 15 - 8-82 அதிகாலை நான் கண்ட ஆங்காங் தீவும் இருநீர் நாடாகிய சீனாவின் கெளலுரன் மூநீர் நிலத்தின் ஒரு சிறு பகுதியும் சேர்ந்த நாடுதான் - பிரிட்டிஷ் காலணி தான்-ஆங்காங். 1997-இல் அங்கே பிரிட்டிஷ் காலணி ஆதிக்கம் ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தப்படி ஒழியும். அப்போது ஆங்காங் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி இப்போது இங்கிலாந்துக்கும் சீனாவுக்கும் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. அண்மையில் பிரிட்டிஷ் பிரதமர் திருமதி தாச்சர் இது குறித்துப் பீஜிங் (பீகிங்) சென்றிருந்தது நாளிதழ் படிப்பவர்கட்கும் வானொலி கேட்பவர்கட்கும் நன்கு தெரியும் (இவை இரண்டும் அறிவு வளர்ச்சிக்கும் இன்றியமையாதன என்பதற்காகவும் இக் குறிப்பு ஈண்டுப் பொறிக்கப்படுகிறது). இருபதாம் நூற்றாண்டின் இமயத் தமிழ் வெற்றி கலைக்களஞ்சியம். அதில் ஹாங்காங் என்ற தலைப்பில் உள்ள குறிப்பு வருமாறு :