பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 "இங்கிலாந்தின் நேரடி ஆட்சியின் கீழுள்ள ஒரு. குடியேற்ற நாடு. இதில் ஹாங்காங் தீவும் சீனாவில் இத்தீவிற்கு எதிராகவுள்ள .ெ க ள லூ ன் (Kowloon) தீபகற்பமும் 355 ச. மைல் பரப்புள்ள புதிய நிலப்பகுதிகளும் (New Territories), Lugo @Ajlui 3of5@jib Al-få®;ib. மொத்தப் பரப்பு 391 ச. மைல். ஹாங்காங் தீவு மட்டும் 32 ச. மைல் பரப்புள்ளது. இங்குள்ள துறைமுகம் மிகவும் சிறந்தது: இங்கிருந்து உலகின் கண்ணுள்ள எல்லாவிடங் களுக்கும் கப்பல்கள் செல்கின்றன. இது தூரக் கிழக்குப் (Fer East) பகுதியிலுள்ள சிறந்த வாணிகத் தலங்களுள் ஒன்றாகும். புதிய நிலப்பகுதிகளிலும் பல வாணிக மையங்கள் உள்ளன. நூற்பு எந்திரங்களும், இரும்பு, ரப்பர், எனாமல் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. மீன் பிடித்தல், கப்பல் கட்டுதல், ஆடை தயாரித்தல் முதலிய தொழில்களும் நடைபெறுகின்றன. தலைநகர் விக்டோரியா, மக்கள் 17,50,000 (1940). 1839-இல் பிரிட்டிஷார் இத்தீவைக் கைப்பற்றிக் கொண்டனர். 1841-இல் சீனர் இதை அவர்களுக்கே கொடுத்ததுமல்லாமல் அடுத்தவாண்டில் செய்து கொண்ட நான்கிங் உடன்படிக்கையின் மூலம் அதனை உறுதியும் செய்தனர். கெளலுன் தீபகற்பம் 1860-இல் ஆங்கிலே பருக்கு வழங்கப்பட்டது. புதிய நிலப்பகுதிகள் 1898-இல் ஆங்கிலேயருக்கு 99 ஆண்டுக்கால அனுபோக உரிமையுடன் வழங்கப்பட்டன. 1941 விருந்து 1945 வரை இப்பகுதிகள் ஜப்பானியர் வசமிருந்தன. உலகப் போரில் ஜப்பானியர் தோல்வி புற்றதும், இப்பகுதிகள் ஆங்கிலேயர் வசமாயின. தமிழ்க் கலைக்களஞ்சியத்தினும் பன்மடங்கு விரி இடையது: Encyciopaedia Britannica---Macropaedia. இதன் சாறாக உள்ள தொகுதிகள் Encyclopaedia-வின் Micropaedia. இவ்விரு தொகுதிகளில் முன்னதில் நால்மூநீர் நாடு ஆங்காங் என்பதை அழகுறக் காட்டும் ஒளிப் படம் ஒன்றும் ஆங்காங் நிலப்பகுதியை விளக்கும் நிலப்படம்