பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 ஒன்றும் உள்ளது. பின்னதில் ஆங்காங் பிரிட்டிஷ் காலணி என்பதைக் காட்டும் கொடியும் கிழக்காசியாவில் அது எங்கே உள்ளது என்பதைக் காட்டும் நிலப்படக் குறிப்பும் உள்ளன. ஆங்காங் பற்றி அழகிய வண்ணப் படங்கள் நிறைந்த புத்தகங்கள் உண்டு. அவை ஆங்காங்கே நேரில் காணாதவருக்கும் ஓரளவு ஆங்காங் அழகைக் காட்டும், என்ன இருந்தாலும் கண்ணுக்குக் கண்ணா-நேருக்கு நேராகப் பார்ப்பது தனி இன்பம்தான். அதற்கு நிகர் ஏதும் இல்லை! மேற்குறித்த இரு கலைக்களஞ்சியங்கள் தரும் குறிப்புகளுள் மிக மிக முக்கியமானது, ஆங்காங்கில் வாழும் மக்களுள் 99% சீனர்கள் என்பதே. அடுத்த முக்கிய குறிப்பு மேற்குறித்த கிழக்காசியப் பகுதியிலிருக்கும் சீனாவின் தென் பகுதியில் ஆங்காங்குக்கு எதிராக வடக்கே இருக்கும் கெளலுரன் மூநீர்ப் பகுதியின் தென் முனையிலிருந்து காண்டோன் செல்லும் இருப்புப் பாதையில் சீனாவின் எல்லைப்புற ஊராகிய லோவூவை எட்ட 28 மைல் ஆகிறது. இந்த எல்லைப் புறத்தில் பயணிகள் 1949. இலிருந்து 300 மூவடி தூரம் நடக்க வேண்டும்.சீனாவுக்குள் நுழைய-இதில் எவ்வித இடர்ப்பாடும் இல்லாதவாறு வசதிகள் உள்ளன. சீனாவின் தென் வாயிலாக உள்ள ஆங்காங்கின் எதிர்காலம் 1997-ற்கு அப்புறம்தான் தெரியும். சீனா ஆங்காங்கை எப்படிப் பயன்படுத்த நினைக் கிறதோ அப்படி அது அமையும். சீன மேலாட்சியில் ஆங்காங் உள்ளாட்சி உடையதாக அமையுமென்று எதிர் பார்க்கப்படுகிறது. இனி, குடுகுடுப்பைக்காரன் போல் கோட்டும் வேட்டியும் அணிந்து கொண் டு பெட்டிகளுடனும் பைகளுடனும் ஆங்காங் விமான நிலையத்தில் இறங்கிய என்னைச் சுங்க அதிகாரிகள் மேலும் கீழும் பார்த்து ஏனோ வெளியே விடாமல் தடுத்து விட்டார்கள். என்னுடன் ஒரு பாகிஸ்தானியையும் தடுத்து விட்டார்கள். பின்னர்தான் எல்லா இந்தியர்களையும் பாகிஸ்தானியர்களையும் சுங்க.