பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அதிகாரிகள் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன். முக்கிய காரணம், ஆங்காங்கில் பிறந்து குடியுரிமை பெற்றவர்கள் தவிர பிற நாட்டார் ஆங்காங்கில் குடி புகுந்து அந்தக் குறை நாட்டின் (Colony) குறைகளை நெருக்கடிகளை மிகுதியாக்கி விடக் கூடாது என்ற அச்சம்தான். இது உலகெங்கும்-வளம் கொழிக்கும் நாடுகளிலும் உள்ளதுதான். சுங்க அதிகாரி என்னைத் தடுத்து நில்லுங்கள்; அங்கே சென்று அமருங்கள்; நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்" என்றார். அரைமணிக்கு மேல் காத்திருந்தேன். என் உள்ளம் என்னவெல்லாமோ எண்ணியது. என்ன செய் வார்களோ ? திருப்பி அனுப்பி விடுவார்களோ ? சிறையில் தள்ளுவார்களோ ? என்றெல்லாம் நினைத்தேன்-கலங்க வில்லை. காரணம் நான்தான் துணிந்து விட்டேனே ! ‘சாகத் துணிந்தவனுக்குச் சமுத்திரம் எம்மாத்திரம் ?” எந்த அனுபவத்தையும் ஏற்பதே இன்பம். ஆங்காங் விமான நிலையம் மிகத் துய்மையாக இருந்தது. விமானத்தில் வந்தவர்கள் எல்லாம் போய் விட்டார்கள். நானும் அந்தப் பாகிஸ்தானி நண்பரும் (!) {ஆம் சூழ்நிலைதானே நட்பைத் தோற்றுவிக்கிறது (!) தனியே திருக்கழுக்குன்றம் பறவைகள் போல் உட்கார்ந் திருந்தோம். ஏன் நம்மை அனுமதிக்கவில்லை ?’ என்று அவரிடம் கேட்டேன். தெரியவில்லையோ ?' என்றார், திகைப்புடன்-நகைப்புடன் அரைமணி கழித்து ஒரு இளம் சீனப்பெண் (பிலிப்பைன் பெண்ணாகவும் இருக்கலாம். காரணம் ஆங்காங்கில் ஆயிரக்கணக்கான பிலிப்பைன் மக்கள் இருக்கிறார்கள். துல்லியமாக வேறுபாடு காண் முடியவில்லை!) என்னிடம் வந்து, அழகிய மரத்தடுப்பு களால் (?) ஆகிய அறைக்குள் அழைத்துச் சென்று அமரச் செய்தார். என் கடவு அட்டை (Pass port)-ஐக் கையில் வைத்துக் கொண்டார். விசாரணை தொடங்கியது, சரள மான ஆங்கிலத்தில்,