பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உங்களுக்கு எப்படித் தெரியும் : கேள்விப் பட்டிருக்கிறேன்! வரும் ஜூலை 4-ஆம் தேதி ஆங்காங்கில் தமிழ்ச்சங்கத்தில் பாரதி விழா! நானும் பேசுகிறேன். இன்னும் யார் பேசுகிறார்கள் : தமிழ் நாட்டுக் கல்வி அமைச்சர்: அப்படியா கான் இந்தி, உருது, சமஸ்கிருதம் என்றெல் லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ்-தமிழர் என்றே கேள்விப்பட்டது இல்லையே! இப்பொது நான் சொல்கிறேன் அம்மா! நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்! நம்புங்கள். தமிழ் வேறு சமஸ்கிருதம் வேறா? ஆமாம் அம்மா! எப்படி? முக்கிய வேறுபாடு சமஸ்கிருதம் மக்களால் பேசப் படாத ஏட்டு மொழி: தமிழ் கோடிக் கணக்கான மக்களால் பேசப்படும் மொழி. இந்திக்கும் தமிழுக்கும் என்ன வேறுபாடு? இந்தி சில நூற்றாண்டு வரலாறே உடைய மொழி: தமிழ் பல நூற்றாண்டுகள்-கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி வளர்ந்து வளமும் வனப்பும் பெற்றமொழி. சரி. நீங்கள் எதற்காக ஆங்காங் வந்துள்ளீர்கள்? சீன அரசு தமிழ்நாட்டுக் கல்வி அமைச்சர் தலைமை யில் ஐந்து அறிஞர்கள் கொண்ட ஒரு கல்விக் குழுவை அழைத்துள்ளது. அக்குழுவில் நானும் ஒருவன் ! எதற்காக அந்த அழைப்பு : நட்புறவுக்காக, சீனாவில் தமிழர் இருக்கிறார்களா ?