பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 சிலர் அலுவல் பார்க்கவும் க்ல்வி கற்கவும் இருக் கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். பீகிங் வானொலி தமிழ் ஒலிப்பரப்புச் செய்கிறது, அங்குள்ள தென் கிழக்கு ஆசிய ஆய்வு நிலையத்தில் தமிழாய்வும் செய்ய முற்பட்டுள்ளார்கள். அப்படியா ? அங்கே போய் நீங்கள் என்ன செய்வீர்கள் ? முதலில் சீனாவை எவ்வளவு நன்றாகத் தெரிந்து கொள்ள முடியுமோ அவ்வளவு நன்றாகத் தெரிந்து கொள்வேன்; தமிழார்வம் உடையவர்க்குத் தமிழ் பற்றிய செய்திகளைத் தெரிவிப்பேன். . சீனத்திற்கும் தமிழுக்கும் தமிழருக்கும் என்ன உறவு ! வரலாற்றுத் தொடர்புதான் பண்பாட்டுத் தொடர்பு தான். வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லா அளவுக்குத் தமிழ் மொழியில் சீனத் தொடர்புடைய சொற்கள் உண்டு. வேறு எந்த நாட்டோடும் தொடர் புடைய தமிழ்ச் சொற்கள் அவ்வளவுக்கு இல்லை ! இது பற்றி நான் ஒரு பட்டியல் தயாரித்துக் கட்டுரையே எழுதியுள்ளேன். சான்றுகள் சில கொல்லுங்கள் சீன அவரை, சீனக்கிளி, சீன வெடி ....................... போதும்; போதும்; நீங்கள் பெரிய ஆராய்ச்சியாளர்தான் ! நீங்கள் என்ன சொல்லித் தருகிறீர்கள் ? தமிழ் ஒரு காளைக்கு எத்தனை மணி நேரம் ? ஒரு மணி, இரண்டு மணி புத்தகங்கள் எழுதியிருக்கிறீர்களா ? ஆம். 16 புத்தகங்கள் கட்டுரைகள் ? நூற்றுக்கு மேல் !