பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4? என்ன இப்படிப் பேசுகிறீர்கள்? சைனா பில்டிங் எனக்குத் தெரியும். அங்கு யாரும் குடும்பத்துடன் தங்குவ தில்லையே ! அம்மா! நான் ஆங்காங்குக்குப் புதியவன். இதோ அவர் வேலை பார்க்கும் இடத்தின் முகவரியும் .ெ த ா ைல பே சி எண்ணும் இருக்கிறது. இந்த எண்ணுக்குத் தொலைபேசி செய்து அவரிடம் பேசிய பின்தான் எனக்கு மற்ற விவரங்கள் தெரியும். உம். சீனா போய் ஜப்பான் போய், அமெரிக்கா போய், ஐரோப்பிய நாடுகட்குப் போய் இந்தியாவுக்குத் திரும்பிப் போவதாகச் சொல்கிறீர்களே அதற்கெல்லாம் பணம் இருக்கிறதா ? எங்கள் இந்திய அரசு அனுமதிக்கும் அ ந் தி ய ச் செலவாணிதான் என்னிடம் இருக்கிறது. அது எவ்வளவு ? 200 டாலர் இந்தப் பணத்தில் நீங்கள் என்ன செய்ய முடியும் ? ஏற்கனவே விமானச் சலுகைச் சீட்டு வாங்கி விட்டேன். அதன்படி எண்பது நாள்களுக்குள் இந்த உலகை ஒரு சுற்று சுற்றலாம். சீன அரசின் விருந்தினராகச் செல்வதால் ஒரு சல்லிக்காசும் செலவில்லை. மற்ற இடங்களில் போதுமான நண்பர்கள் இருக்கிறார்கள். உணவுக்கும் உறையுளுக்கும் இடர் இல்லை. சரி, சீன அரசு அழைத்ததற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள். (சீன அரசு அழைத்த அழைப்பையும் அதை ஏற்று இந்திய அரசு தந்த இசைவுக்கு உரிய ஆணையையும் காட்டினேன்.) சரி, இருங்கள் இதைப் படம் எடுத்துக்கொண்டு முடிவு சொல்கிறேன். 3208–3