பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"مسا o மறைக்காடர் குடும்ப மாண்பு ஆங்காங் விமான நிலையத்தில் அந்த ஆரணங்கு நடத்திய விசாரணை முடிந்ததும் வெற்றி வீரன்’ போலப் பயணிகளின் சரக்குகள் (iபggages) இறக்கி வைக்கப்படும் இடத்துக்கு விரைந்தேன். அந்த இடம் வெறிச்சிட்டுக் கிடந்தது ; திகில் அடைந்தேன். இக்கட்டுரையின் வாசகர் களில் சிலர் விமான நிலையத்தை-அதன் பல்வேறு பிரிவு களைப் பார்க்காமல் இருத்தல் கூடும். அதனால் சரக்குகள் இறக்கி வைக்கப்படும் இடம் குறித்துச் சில சொற்கள் : விமானத்தில்-அதன் அடிவயிற்றில் சுமந்து வரும்பல்வகைப் பெட்டி, படுக்கை, தட்டுமுட்டுச் சாமான்கள் விமானம் தரை இறங்கிய உடனே விமானத் திடலுக் குள்ளேயே காத்திருக்கும் சரக்கு வண்டிகளில் கொண்டு வரப்படும். U வடிமாக இருக்கும் இழுவையில் அவை வைக்கப்படும். U வடிவி லே யே அவை சுழலும். பயணிகள் தங்கள் பொருள்கள் வந்ததும் அவரவர் களும் தாவிப் பிடித்துப் பக்கத்தில் இருப்பவர்களை இடித்தும் இடிக்காமல் எடுத்துச் செல்வர். இதில் சிலர்க்குச் சில எரிச்சல் மூட்டும் நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாக மூன்று : 1. பயணச்சீட்டு வாங்கும் வரிசையில் முதலில் நின்று சீட்டு வாங்கி முதலில் சரக்குகளைப் போட்டு அவற்றிற் குரிய சான்றுச் சீட்டுகளை வாங்கி இருப்போம். ஆனால் விமானம் வந்து இறங்கியதும் கடைசியில் நம் சரக்குகள் வரும். ஆம், முதலில் போட்டது. கடைசியில் வந்தால் எப்படி இருக்கும் ?! -