பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 2. போட்ட சரக்குகளில் முதலில் சில வரும். ஆனால் ஒன்றோ இரண்டோ கடைசியில் வரும்; அதுவரை காத்துத் தொலைக்க வேண்டும். 3. ஒரேமாதிரி பெட்டிகள்/பொருள்கள் வரும். எது நமது என்று கையில் பையில் இருக்கும் சரக்குச் சீட்டு எண்ணோடு சரி பார்த்து உரியதைத் தேடிப் பிடிக்க வேண்டும். மேற்கண்ட சிக்கல்கள் எதுவும் எனக்கு ஆங்காங் விமான நிலையத்தில் ஏற்படவில்லை. காரணம் வைக்கப் பட்ட விசாரணையை முடித்துக் கொண்டு சரக்குகள் வரும் இடத்திற்குப் போனபோது அங்கும் ஒருவரும் ஒன்றும் இல்லை. அதிர்ச்சி அடையாமல் எப்படி இருக்க முடியும் ? எவரோ நம் பொருள்களையும் கடத்திச் சென்று விட்டார்கள் என்றே எண்ணினேன். எதிரே வந்த எவரோ ஒருவரைப் பார்த்து என் குறையைக் கூறினேன். எந்த விமானத்தில் வந்தீர்கள் ? என்றார். ஏர் இந்தியா' என்றேன். அதோ கம்பெனி அலுவலகம். அங்கே விசாரியுங்கள்’ என்றார். விசாரித்தேன். அதோ அந்த இடத்தில் இருக்கின்றனவா ? என்று ஒரிடத்தைச் சுட்டிக் காட்டினார்கள். ஒடிப் போய் பார்த்தேன். அனைத்தும் ஒரு தாய் வயிற்துப் பூனைக் குட்டிகள் போல் ஒன்றாய்க் குந்தி இருந்தன. என்னைக் கண்டு குறுநகை பூத்தன. மறுபடியும் வெற்றி வீரனாய் அவற்றைத் தள்ளுவண்டியில் (விமான நிலையத்தில் செளகரியமாய் இருப்பவைஅவற்றை விமான நிலையத்தில் வரிசையாய்த் தள்ளி வைக்கும் ஏவலர்கள் திறமே திறம்! வைத்துக் கொண்டு. பயணத்துறை (Tourism) அலுவலகங்கள் இருக்கும் இடம் நோக்கினேன். அங்கே கம்பியூட்டர்கள் இயங்கிக் கொண்டிருந்தன. தொலைபேசி உதவிக் கேட்டேன். எதிரே இருந்த பொதுத் தொலைபேசிகளைச் சுட்டிக் காட்டினார்கள். அவற்றுள்