பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 ஒன்றிடம் சென்று அது இயங்கும் முறையை அறிந்து கொண்டேன். சென்னையில் இருந்து புறப்படும் முன் டாக்டர் மு. நாகநாதன் திரு. மறைக்காடர் அலுவலக எண்ணைக் கொடுத்திருந்தார். திரு. மறைக்காடர் மறை மலை அடிகளார் பேரர் என்றும் பண்பாட்டின் திருவுருவம்பெரு உருவம் என்றும் யான் எண்ணும்படி நல்லுரைகள் நவின்றிருந்தார். திரு. மறைக்காடர் பேசினார். சில நாட்களுக்கு முன்பு டாக்டர் மு. நாகநாதன் கடிதம் எழுதியிருந்தார் என்றும் அதற்குப் பின்பு ஒன்றும் தெரியாது என்றும் கூறினார். நான் நேற்று இரவே அவர்கள் ஆங்காங் வந்திருக்க வேண்டும் என்றும், அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றும், இரண்டு நாளில் சீனாவுக்குப் போக இருக்கிறோம் என்றாலும் எனக்குத் தங்குமிடம் எதுவும் தெரியாது’ என்றும் உரைத்தேன். திரு. மறைக்காடர் மனம் நெகிழ்ந்து, எனக்கு அலுவலக நேரம்; இப்போது எங்கும் நகர முடியாது. ஆனால் வீட்டிற்குத் தொலைபேசி செய்து மனைவியையும் மகளையும் வண்டி கொண்டு வந்து உங்களை வீட்டிற்கு அழைத்துப் போக ஏற்பாடு செய்கிறேன்; உங்கள் அடை யாளம் என்ன ? விமான நிலையத்தில் எங்கே இருக் கிறீர்கள் ? என்றார். நான் என் அழகிய திருவுருவத்தை வருணித்தேன். வேட்டி கட்டியிருப்பேன்; தாடி உண்டு; குடுகுடுப்பைக்காரன் போல் இருப்பேன்; பொதுத் தொலைபேசிகள் இருக்கும் இடத்தில் இருப்பேன்? பார்த் தாலே அடையாளம் தெரியும்’ என்றேன். சில மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும்; மனைவி யிடமும் மகளிடமும் பேசி ஏற்பாடு செய்கிறேன்’ என்றார். "எவ்வளவு நேரமாயினும் காத்திருப்பேன்; புகலிடம் வேறு இல்லை என்றேன்.