பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 சில மணி நேரங்கள் சொன்ன இடத்தில் சொன்னபடி காத்திருந்தேன். போவோர் வருவோர் என்னை வேடிக் கைப் பார்த்துக் கொண்டு போவதுபோல் தோன்றியது. காலையில் ஒன்றும் சாப்பிடவில்லை. பட்டினி. அதைப் பற்றி-எதைப் பற்றியும் கவலை இல்லை-நான்தான் உலகத்தைப் பார்க்க வேண்டும் என்று புறப்பட்டு: • స్కో - ജി..:3.3:് : சில மணி நேரம் கழித்து ஒர் இளம் பெண்-மாநிறம், அயலக உடை-என்னிடம் வந்து நீங்கள்தான் டாக்டர் சஞ்சீவியா ?' என்று கேட்டார். ஆம் என்றேன். நான் மறைக்காடர் மகள். அம்மாவும் வந்திருக்கிறார்கள். உங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லச் சொல்வி யுள்ளார்கள். வாருங்கள் போகலாம் என்றார். சற்று நேரத்துக்கெல்லாம் திருமதி மறைக்காடரும் வந்தார்கள்-புன்முறுவலுடன் வணக்கம்’ சொன்னேன். *வணக்கம் சொன்னார்கள். திருமதி மறைக்காடர் மகள் என் பொருள்களைக் காரில் ஏற்றினார்கள். அம்மாவும் பெண்ணும் முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டார்கள். அம்மாவே வண்டியை ஒட்டினார்கள். வீடு போய்ச் சேர ஒரு மணிக்கு மேல் ஆகியிருக்கும். அவ்வளவு தொலைவு. வழிநெடுக வானுயர் கட்டடங்கள்: விமானத்தில் இருந்து பார்த்த ஆங்காங்கை இப்போது தரையில் இருந்து பார்த்தேன். கற்றியும் கடல்; தீவு; இடையிடையே மலைகள், மலைகள் மேல் அடுக்கடுக்காய்க் கட்டடங்கள்; கட்டடங்கள் மேல் எல்லாம் பச்சைப்பசுங் கொடிகளும் செடிகளும். ஆம், எவ்வளவுச் செயற்கையில் சிக்கினாலும் மனிதனுக்கு இயற்கையில் கிடைக்கும் ஆறுதல் 1 இன்பம் வேறெங்கே கிடைக்கும். கடல்-நிலம்-மலை-மாடிகள்வானம்-எல்லாம் கையகத்துள்-கண்ணகத்துள். வையக மும் வானகமும் கையகம் கண்ணகம் ஆனால் எப்படி இகுக்கும் தனக்குள் எல்லாம் என்ற நிலையில் அகந்தை