பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இயந்திரம் டிக்கட் தரும். இப்போது இந்த முறைகள் எல்லாம் நம் சென்னை போன்ற, நகரங்களில் உள்ள ஒட்டல்களிலும் பெரிய கடைகளிலுமே வந்துவிட்டன. வருங்கால உலகம் எலெட்ரானிக்-இயந்திர உலகம்தானே! திருமதி மறைக்காடர் காரை மலை அடுக்கத்தில் உள்ள பல அடுக்கு மாடிக் கட்டடத்தருகே ஓரிடத்தில் நிறுத்தி விட்டுத் தம் வீட்டுக்குத் துாக்கி (Lift) வாயிலாக அழைத்துச் சென்றார்கள். என் பொருள்கள் எல்லாம் தனி ஓர் அறையில் வைக்கப்பட்டன. அங்கே இருந்த தனிக் கட்டிலில் உண்டபின் ஒய்வு கொள்ளச் சொன்னார்கள். முன்பின் தெரியாத ஒரு தமிழ் அன்னையின் உள்ளம் காட்டிய அன்பு என்னை மிகவும் நெகிழ்வித்தது. திரு. மறைக்காடர் வீடு ஒரு சமையற்கூடம், ஒரு பொது அறை, இரண்டு படுக்கை அறைகள், ஒரு கழிவு ! குளியல் அறை கொண்டது. இரண்டு படுக்கை அறையில் ஓர் அறையில் கழிவு குளியல் அறையும் உண்டு. பொது அறையில்-மிகப் பெரியதும் மிகக் சிறியதும் இல்லாத அந்த அறையில் அழகிய நாற்காலிகளும் புத்தகங்கள் குறிப்பேடுகள் முதலியன வைப்பதற்குரிய ஒரு சின்னஞ்சிறிய அலமாரியும் இருந்தன. ஆனால், என் உள்ளத்தைப் பெரிதும் கவ்ர்ந்தவை உணவு அருந்த சுற்றி உட்காரும் ஒரு நடுத்தரப் பரப்புள்ள வட்ட மேசையும் அதணெதிரே அமைந்த வானொலி|ளி இரண்டும் கலந்த பெட்டியுமே ஆகும் அதில் வீடியோ படங்களைப் போட்டுப் பார்க்கும் வாய்ப்பும் இருந்தது. மறைமலையடிகள் படத்தை என் கண்கள் தேடின; காணவில்லை வருந்தினேன். எல்லாம் இருந்தும் அந்தப் படம் இல்லாதது எனக்குப் பெருங்குறையாய் இருந்தது. அதைப் பின்னர் திரு, மறைக்காடர் வீட்டுக்கு வந்ததும் நேரம் : நெஞ்சம் அறிந்து கூ றி னே ன். அவரும் வருத்தினார்.