பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 திருமதி மறைக்காடரும் அவர் திருமகளாரும் உணவருந்த அழைத்தனர். நான் குளித்து விடுவதாகக் கூறினேன். சரியென்று குளியலறையைக் காட்டினார்கள். வெந்நீர் தண்ணிர் இரண்டையும் அளவாகக் கலந்து எப்படிக் குளிப்பது எ ன்று ம் அறிவுரை நெறியுரை கூறினார்கள். எச்சரிக்கையாக நடந்து கொண்டேன். காரணம் முன்னம் ஒருவர் நெறியறியாது குளிக்கப் போய் வெந்நீரில் வெந்ததை டாக்டர் அவ்வை நடராசன் சொல்ல (இத்தகு செய்திகளைச் சொல்வதில் அவருக்குள்ள ஆர்வமும் ஆற்றலும் உலகறிந்தவை) அதைப் பெருங்கவிக் கோ தமது உலகப் பயணம் நூலில் குறித்திருப்பதை என்னால் எப்போதும் மறக்க முடிவதில்லை. 23 ஆண்டு களுக்கு முன்பு சிங்கப்பூர்-மலேசியா சுற்றுப் பயணத்தில் அடியேனே இதை ஒரளவு அறிந்திருந்தேன். ஆனால் அப்போது காணாத ஒரு புதுமை என நினைக்கிறேன்குளியல் தொட்டியின் மேலே வடிவர்' எனப்படும் நீர்ச் சொரிவுகள் இருக்கும்; இப்போதோ நம் கார்மெகானிக்’’ கடைகளில் காரைக் கழுவப் பயன்படுத்தப்படும் பீச்சுக் குழாய்கள் இருந்தன. அ வ ற் றி ன் துணைகொண்டு உடம்பின் எப்பகுதியிலும் நீரைப் பீச்சலாம்-பாய்ச்சலாம். அதில் கிடைக்கும் ஊற்றின்பம் | ஊக்க இன்பம் பெரிது. சென்னையிலேயே செல்வர் வீடுகளில் இந்த வசதி இருக்கும்! அறைக்கு அறை தொலைக் காட்சிப் பெட்டிகள் உள்ள வீடுகள் உண்டோ! ஆனால் நம் போன்றவர்கள் நம்மூரில் பார்க்க முடியாத வியப்புகளை-வசதிகளை எளிமையாகக் காண இத்தகைய அயல்நாட்டுப் பயணங்கள் என் போன்றார்க்குப் பயன்படல் முன்னை செய்த நல்வினை போலும்! வெதவெதப்பான நீரில் குளித்ததுமே விறுவிறுப்பான உடல்நிலை ஏற்பட்டது. காரணம் வெதவெதப்பான நீர் வேகமாக உடல்மீது பாய்வதால் நரம்புகள் விரிவுற்று இரத்த ஒட்டம் பெருகும் போலும்! சென்னையிலேயே