பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தினம் குளிக்கும்போது வெந்நீரிலாயினும் தண்ணிரிலாயினும் நான் மறவாமல் நினைக்கும் ஒரு திருக்குறள் உண்டு. அது : புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை வாய்மையால் காணப் படும் என்பதாகும். இந்தக் குறள் நினைவோடேயே யான் நாளும் குளியலறை விட்டு நாளும் வாழ்க்கைக் குளியலில் ஈடுபடுவது வழக்கம். புனைவு இல்லாத இந்த நினைவு என்னைப் பெரிதும் வாழ்வித் துள்ளது. திருமதி மறைக்காடர் மின் சாதனங்கள் துணை கொண்டு மிகவிரையில் தயாரித்த அறுசுவை உணவைஇல்லை-அமுதை உண்ண வட்ட மேசையின் ஒருபால் அமர்த்தேன். திருமதி மறைக்காடரும் அவர் மகளும் எதிரே அமர்ந்தார்கள். மேசைமேல் ஒரு பெரிய வட்டத். தட்டு இருப்பதைப் பார்த்தேன். பலவகை மரக்கறி உணவுகளும் மலர்ந்திருக்கக் கண்டேன். சற்று நேரத்தில் பெரிய வட்ட மேசைமேல் இருந்த உள்வட்டத் தட்டு மெல்ல சுழன்றது ; திருமதி மறைக்காடர் சுழற்ற கீழ்த் தட்டில் சோறும் கறியும் வேண்டியபோது வேண்டிய வாறு போட்டுக் கொள்ள அந்த உள்தட்டுச் சுழற்சி பயன் பட்டது. ஆம், ஒருவர் பரிமாறும் உழைப்பையே செய்யும் வேலை மிச்சமாகிறது. இதை எளிதாக நம் வீடுகளில் செய்யவாமே என்று தோன்றியது. இதுபோல் இன்னும் எவ்வளவு எவ்வளவோ வசதிகளை எளிமையாகச் செய்து கொண்டு வாழ்கின்ற வையகத்தை நினைந்து வியத்து மகிழ்ந்தேன். - - தமிழ்ச் சுவை ததும்பும் உணவு உண்டபின் கண்கள் சொருகின; கொஞ்ச நேரம் டி.வி. பார்க்க முயன்றேன். என் இயல்புக்கு அறவே பிடிக்காத குத்து-கொலைகொள்ளைக் காட்சிகள் வந்தன. போதும் என்று போய்ப் படுத்து விட்டேன்.