பக்கம்:சீனம் தரும் சிந்தனைகள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5? இரவு எட்டுமணி இருக்கலாம். திரு. மறைக்காடர் வீட்டிற்கு அலுவலகத்திலிருந்து திரும்பினார். எப்படி அவரை அறிந்து கொண்டேன் என்கிறீர்களா? . வீட்டுக் கதவு மூடப்பட்டிருந்தது. திடீரென அழைப்பு மணி அடித்தது. செல்வி மறைக்காடர் ஒடிப் போய்க் கதவி லிருந்த ஒரு சிறு கண்ணாடி வழியே பார்த்தார்; அப்புறம் கதவை திறந்தது. நாகரிக உலகம் எவ்வளவு நடுக்கத்தில் வாழ்கிறது என்பதை உணரத் தொடங்கினேன். அடையா நெடுங்கதவம் என்பதெல்லாம் பழங்கற்பனை. ஆங்காங் கிலேயும் அமெரிக்காவிலும் இப்படிக் கண்ணாடி வழி காண்பதோடு இல்லாமல் தொலைபேசி செய்துதான் யாரென்று ஒருவர் அறிவித்தால்தான் கதவைத் திறக்கும் நிலை இருக்கக் கண்டேன். ஆம், பிறர் துன்பம் கண்டு அஞ்சும் நாகரிகம் பழம்நாகரிகம் , பிறர் துன்புறுத்துவர் என்று அஞ்சி அஞ்சி வாழ்வதே இன்றைய நாகரிகம், திரு. மறைக்காடர் நல்ல உயரம் ; மலர்ந்த முகம்: மறைமலை அடிகளை மிக இளம் வயதிலேயே நேரில் பார்த்துப் பழகிய எனக்கு-அவர்தம் நூல்களில் ஈடுபாடு கொண்ட எனக்கு-மறை மாணிக்கவாசகம் அவர்களையும் நன்றாக அறிந்த எனக்கு-ஆங்காங்கில் அவர் பேரரைப் பார்க்க நேர்ந்தது அளவிலா மகிழ்வு தந்தது. பாடுபட்ட குடும்பத்தினர்-வழியினர் நல்ல நிலையில் இருப்பதைக் கேட்கும் போதும் என் உள்ளம் உருகும். மறைமலை அடிகள் குடும்பத்தார் அனைவரும் நன்றாக இருப்பது தமிழ்-தமிழர் பெற்ற பேறு. மறைமலை அடிகளார் குடும்பம் என்றே ஒரு தனி நூல் எழுதலாம். அந்த அளவிற்கு ஒருவரும் சோடை போகாமல் ஒவ்வொரு துறையில் சிறந்திருப்பதை நினைக்கும் போதெல்லாம் செந்தமிழ் இன்பம் திருக்குறள்-திருவாசகத் தேனாய்த் தித்திக்கிறது. மனைக்குள் நுழைந்த திரு. மறைக்காடர் ஆங்கில உடைகளைந்து முடித்துக் கொண்டு திருநீறு அணிந்து